ஆரஞ்சு அலர்ட்.. கேரளாவில் கொட்டப்போகும் மிக கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வரும் நிலையில் இன்று எர்ணாகுளம் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.
தென்மேற்கு பருவமழை தென் மாநிலங்களில் தமிழ்நாடு தவிர மற்ற மாநிலங்களுக்கு எதிர்பார்த்த அளவுக்கு கை கொடுக்கவில்லை. குறிப்பாக கர்நாடகாவின் நீர் பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யாததால் முக்கிய அணைகளின் நீர்மட்டம் உயரவில்லை. அதேபோல கேரளாவில் மழை பொய்த்து போனதால் அணையின் நீர்மட்டம் குறைய தொடங்கியது. எனவே மின்சார உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை ஓரளவு தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது.

கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று எர்ணாகுளம் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல 9 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலர்ட் கொடுத்திருக்கிறது. தலைநகர் திருவனந்தபுரம், பத்தினம்திட்டா, இடுக்கி, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை (மஞ்சள் அலர்ட்) பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்க வாய்ப்பிருப்பதால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இந்த மழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்ய வேண்டும் என கேரள மக்கள் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள்.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications