சென்னை தாம்பரம் சுற்றுவட்டாரத்தில் 7 முக்கிய சாலைகள் முழுமையாக மூடல்! காவல்துறை அறிவிப்பு!
சென்னை: சென்னையின் நுழைவு வாயிலாக கருதப்படும் தாம்பரம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள 7 முக்கிய சாலைகள் முழுமையாக மூடப்படுவதாக காவல்துறை அறிவித்துள்ளது.
எந்தெந்த சாலைகள் மூடப்பட்டுள்ளன அதற்கான காரணங்கள் என்ன என்பது பற்றி தாம்பரம் மாநகர காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு;

''தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மிக் ஜாம் புயல் காரணமாக GST சாலை, வேளச்சேரி பிரதான சாலை, OMR சாலை, ECR சாலை மற்றும் முக்கிய சாலைகளில் பலத்த காற்று மற்றும் மழையின் காரணமாக ஆங்காங்கே மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாலைகளில் முறிந்துள்ளன. அவற்றை சீர் செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பொது மக்கள் யாரும் அத்தியாவசிய தேவையின்றி வீட்டிலிருந்து வர வேண்டாம் என்று தாம்பரம் மாநகர காவல் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட கீழ்கண்ட சாலைகளில் குளம் மற்றும் ஏரிகள் நிரம்பியும் உடைந்தும் வெள்ளம் பெருக்கெடுத்து சாலையில் செல்வதால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி போக்குவரத்து முற்றிலுமாகவும் தடை செய்யப்பட்டுள்ளது.
i) சோழிங்கநல்லுர் சந்திப்பு முதல் மேடவாக்கம் குளோபல் மருத்துவமனை வரை
ii) பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனை மேம்பாலத்தில் மின் கம்பம் விழுந்துள்ளதால் மேம்பாலம் மூடப்பட்டுள்ளது.
ii) காமாட்சி மருத்துவமனை சந்திப்பு முதல் ஈச்சங்காடு சந்திப்பு மற்றும் 200 அடி சாலை மூடப்பட்டுள்ளன.
iv) 400 அடி வெளிவட்ட சாலை, வண்டலூர் முதல் பூந்தமல்லி உள்ள சர்வீஸ் சாலையில் வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.
v) சித்தாலபாக்கம் முதல் மாம்பாக்கம் செல்லும் வழி தடை செய்யப்பட்டுள்ளது.
vi) OMR சாலையில் கனரக வாகனங்கள் தடை செய்யப்பட்டு கேளம்பாக்கம் சந்திப்பில் இருந்து வண்டலூர் மார்க்கமாக திருப்பிவிடப்படுகின்றன.
vii) தாம்பரத்திலிருந்து முடிச்சுர் செல்லும் சாலை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications