இந்த வாரமும் இப்படித்தான் இருக்க போகுது.. திரண்டு வந்த "கருத்த மேகம்".. வானிலை மையம் செம வார்னிங்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் இந்த வாரம் தமிழ்நாட்டில் வானிலை எப்படி இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது,
வானிலை மைய அறிவிப்புபடி, மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,

07.09.2023 & 08.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
09.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
10.09 2023 முதல் 11.09.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள் மற்றும் வாய்ப்புள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய
12.09.2023 & 13.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில
பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்); வென்ட் வொர்த் எஸ்டேட், செர்முல்லி (நீலகிரி), தேவாலா (நீலகிரி) தலா 7, சின்னகள்ளார் (கோயம்புத்தூர்) 5. சோலையார் (கோயம்புத்தூர்), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), அழகரை எஸ்டேட் (நீலகிரி) தலா 4 புதுச்சத்திரம் (நாமக்கல்), கூடலூர் பஜார் (நீலகிரி), நடுவட்டம் (நீலகிரி), மேல் கூடலூர் (நீலகிரி), வடகுத்து (கடலூர்), பார்வூட் (நீலகிரி), சின்கோனா (கோயம்புத்தூர்), எடப்பாடி (சேலம்), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), முசிறி (திருச்சி), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) தலா 3, மேலாளத்தூர் (வேலூர்), ஆதார் எஸ்டேட் (நீலகிரி), சிறுகுடி (திருச்சி).
வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்), வூட் பிரையர் எஸ்டேட் (நிலகிரி), ஹரிசன் மலையான லிமிடெட் (நீலகிரி), பென்னாகரம் (குருமபுரி), கீழ் அணைக்கட்டு (தஞ்சாவூர்), திரூர் KVK AWS (திருவள்ளூர்), திருவள்ளூர், ஆம்பூர் (திருப்பத்தூர்) தலா 2. நாவலூர் கோட்டப்பட்டு (திருச்சி), குளித்தலை (கரூர்), வாத்தலை அணைக்கட்டு (திருச்சி), கோத்தகிரி (நிலகிரி), நன்னிலம் (திருவாரூர்), தேவிமங்கலம் (திருச்சி), வரட்டுப்பள்ளம் (ஈரோடு), சிறுகமணி KVK AWS (திருச்சி), தேக்கடி (தேனி), திருத்தணி (திருவள்ளூர்), ஒகேனக்கல் (தருமபுரி), அவலாஞ்சி (நீலகிரி), குடியாத்தம் (வேலூர்), பெரியார் (தேனி), திருச்செங்கோடு (நாமக்கல்), விரிஞ்சிபுரம் AwS (வேலூர்), மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), திருச்சிராப்பள்ளி சந்திப்பு, சிறுவாணி அடிவாரம் (கோயம்புத்தூர்), மேல் பவானி (நீலகிரி), சேலம், திருத்தணி PTO (திருவள்ளூர்), ஆர்.கே.பேட்டை (திருவள்ளூர்). காரைக்கால், புகையிலை நிலையம் (திண்டுக்கல்), வேடசந்தூர் (திண்டுக்கல்), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), கிளென்மார்கன் (நீலகிரி), மயிலாடுதுறை, சோளிங்கர் (இராணிப்பேட்டை), ஜெயம்கொண்டம் (அரியலூர்), பொன்மலை (திருச்சி) தலா 1.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்:
07.09.2023: தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும்
இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
08.09.2023 & 09.09.2023: தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 10.09.2023 & 11.09.2023: தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும்
இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்:
07.09.2023 & 08.09.2023: வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
09.09.2023: தெற்கு இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடலின் கிழக்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
10.09,2023: தெற்கு இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
11.09.2023: மத்தியமேற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள்:
12.09.2023: கேரளா-கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.











Click it and Unblock the Notifications