மளமளமளன்னு கொட்டப்போகும் கனமழை.. 3 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்! சென்னை மக்களே.. கவனமா இருங்க
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து வெளியான அறிவிப்பில், "நேற்று மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (16-11-2023) காலை 05.30 மணி அளவில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று காலை 08.30 மணி அளவில் விசாகப்பட்டினத்திலிருந்து சுமார் 390 கிலோ மீட்டர் கிழக்கு - தென்கிழக்கே, பரதீப்பிலிருந்து (ஒரிசா) சுமார் 320 கிலோ மீட்டர் தென் - தென்கிழக்கே, டிகாவிலிருந்து (மேற்கு வங்கம்) சுமார் 460 கிலோ மீட்டர் தென் - தென்மேற்கே, கேப்புபாராவிலிருந்து (வங்கதேசம்) சுமார் 610 கிலோ மீட்டர் தென் - தென்மேற்கே நிலை கொண்டுள்ளது.

இது வடக்கு - வடகிழக்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற்று, 18-ஆம் தேதி அதிகாலை வங்கதேச கடற்கரையை மோங்க்லா - கேப்புபாராவிற்கு இடையே கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும் இருக்கக்கூடும்.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 18.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
19.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
20.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 21.11.2023 மற்றும் 22.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): பொன்னேரி (திருவள்ளூர்) 8, சிவலோகம்(சிற்றாறு-II) (கன்னியாகுமரி) 7, தக்கலை (கன்னியாகுமரி) 6, கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்) 5, திற்பரப்பு (கன்னியாகுமரி) 4, சென்னை ஆட்சியர் அலுவலகம் (சென்னை), சீர்காழி (மயிலாடுதுறை), மண்டலம் 08 மலர் காலனி (சென்னை), சோழிங்கநல்லூர் (சென்னை), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), மண்டலம் 06 திரு.வி.க.நகர் (சென்னை), CD மருத்துவமனை தண்டையார்பேட்டை (சென்னை), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), தேக்கடி (தேனி), மண்டலம் 01 கத்திவாக்கம் (சென்னை), கோழிப்போர்விளை (கன்னியாகுமரி), புத்தன் அணை (கன்னியாகுமரி), மரக்காணம் (விழுப்புரம்), வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்), செய்யூர் (செங்கல்பட்டு), செம்பனார்கோயில் பொதுப்பணித்துறை (மயிலாடுதுறை) தலா 3, கொள்ளிடம் (மயிலாடுதுறை), மண்டலம் 02 D15 மணலி (சென்னை), அடையாமடை (கன்னியாகுமரி), சாத்தான்குளம் (தூத்துக்குடி), மண்டலம் 06 D65 கொளத்தூர் (சென்னை), மண்டலம் 03 புழல் (சென்னை), தரங்கம்பாடி (மயிலாடுதுறை), பெரியாறு (தேனி), மண்டலம் 01 திருவொற்றியூர் (சென்னை), மண்டலம் 03 மாதவரம் (சென்னை), டிஜிபி அலுவலகம் (சென்னை), மண்டலம் 04 தண்டையார்பேட்டை (சென்னை), சத்யபாமா பல்கலைக்கழகம் ARG (காஞ்சிபுரம்), புழல் ARG (திருவள்ளூர்), மண்டலம் 02 மணலி (சென்னை), மஞ்சளாறு (தஞ்சாவூர்), அண்ணாமலை நகர் (கடலூர்), சிதம்பரம் AWS (கடலூர்), குன்றத்தூர் (காஞ்சிபுரம்), செங்குன்றம் (திருவள்ளூர்), மண்டலம் 07 அம்பத்தூர் (சென்னை), மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), மாதவரம் (சென்னை), மண்டலம் 15 உத்தண்டி (சென்னை), சோழவரம் (திருவள்ளூர்), அம்பத்தூர் (சென்னை), அணைகெடங்கு (கன்னியாகுமரி), பெரம்பூர் (சென்னை), மயிலாடுதுறை (மயிலாடுதுறை), எண்ணூர் AWS (சென்னை) தலா 2, மண்டலம் 07 U18 D81 வானகரம் (சென்னை) 2, நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்), சிதம்பரம் (கடலூர்), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), நாலுமுக்கு (திருநெல்வேலி), கோடியக்கரை (மயிலாடுதுறை), பூண்டி (திருவள்ளூர்), பாளையம்கோட்டை (திருநெல்வேலி), பரங்கிப்பேட்டை (கடலூர்), மண்டலம்5 சோழிங்கநல்லூர் (சென்னை), மண்டலம்3 அடையார் சுற்றுச்சூழல் பூங்கா (சென்னை), மண்டலம்1 U32 மதுரவாயல் (சென்னை), பூண்டி (திருவள்ளூர்), திருநெல்வேலி AWS (திருநெல்வேலி), அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை), மண்டலம் 08 அண்ணாநகர் (சென்னை), தண்டையார்பேட்டை (சென்னை), மண்டலம் 05 ராயபுரம் (சென்னை), மண்டலம்3 அடையார் (சென்னை), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), VIT சென்னை AWS (செங்கல்பட்டு), மேற்கு தாம்பரம்_SIT ARG (செங்கல்பட்டு), திருவொற்றியூர் (சென்னை), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), திரு.வி.க நகர் (சென்னை), பாலமோர் (கன்னியாகுமரி), ஆவடி (திருவள்ளூர்), ஊத்து (திருநெல்வேலி), சுருளக்கோடு (கன்னியாகுமரி), சென்னை (N) AWS (சென்னை), சென்னை நுங்கம்பாக்கம் (சென்னை), காரைக்கால் (காரைக்கால்), பெருங்குடி (சென்னை), ராமநதி அணைப் பகுதி (தென்காசி), மண்டலம்2 D156 முகலிவாக்கம் (சென்னை), அடையாறு (சென்னை), தரமணி ARG (சென்னை), மண்டலம்4 U41 பெருங்குடி (சென்னை), திருநெல்வேலி (திருநெல்வேலி), மணல்மேடு (மயிலாடுதுறை), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), பூந்தமல்லி (திருவள்ளூர்), கடலூர் ஆட்சியர் அலுவலகம் (கடலூர்), ராயபுரம் (சென்னை), திருப்பூண்டி (நாகப்பட்டினம்), காக்காச்சி (திருநெல்வேலி), மண்டலம் 09 ஐஸ் ஹவுஸ் (சென்னை), மண்டலம்2 ஆலந்தூர் (சென்னை), தலைஞாயிறு (நாகப்பட்டினம்) தலா 1. " என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை












Click it and Unblock the Notifications