Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இரவு முதல் அதிகரிக்கும் மழை.. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வார்னிங் தந்த தமிழ்நாடு வெதர்மேன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ‛டிட்வா' புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்னும் உயிருடன் உள்ளது. இதனால் இன்று இரவு முதல் நாளை வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்பட தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என்று தனியார் வானிலை ஆர்வலர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வார்னிங் செய்துள்ளார்.

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் தென்மேற்கு வங்கக்கடலில் உருவான‛டிட்வா' புயல் தான். இந்த புயல் தற்போது வலுவிழந்தது. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று வலுகுறைந்து சென்னை அருகே மையம் கொண்டுள்ளது.

rain weather chennai

இதனால் சென்னை மற்றும் அதனை சுற்றிய மாவட்டங்களில் இன்று இரவு முதல் நாளை வரை மீண்டும் மழை அதிகரிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் தமிழ்நாடு வெதர்மேன் என்ற பெயரில் மழை குறித்த அப்டேட்டுகளை வழங்கி வரும் தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் இன்று இரவு 8.52 மணிக்கு தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் முக்கிய பதிவை செய்துள்ளார். அதில் சென்னை உள்பட பல மாவட்டங்களில் இரவு முதல் மழை தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக பிரதீப் ஜான் வெளியிட்ட பதிவில், ‛‛ காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் (Ex Ditwah) இன்னும் உயிருடன் உள்ளது. இன்று இரவு முதல் நாளை காலை முதல் கரையை கடக்க வாய்ப்புள்ளது. இந்த நிகழ்வு மிகவும் மெதுவாக நடக்கும். இந்த வேளையில் எதுவுமே தெரியாது. மேலும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் (Ex Ditwah) இன்னும் கடலில் உள்ளது. சென்னையின் தெற்கே கல்பாக்கத்தை நோக்கி நள்ளிரவு முதல் அதிகாலை வரை நகரும்.

இதனால் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு முதல் நாளை வரை மழை அதிகரிக்க வாய்ப்புள்ளது. திருவள்ளூர் மற்றும் வட சென்னை பகுதிகளில் மேகங்கள் தீவிரமாக திரள்வதை படத்தில் காணலம். சுழற்சி இன்னும் இருக்கிறது. இதனால் மழை மேகங்கள் எப்போது வேண்டுமானாலும் உருவாகலாம் . எனவே இன்று இரவு முதல் நாளை வரை காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்புகள் மிக அதிகம்.

கரையை கடந்த பிறகு தமிழகம் முழுவதும் ஈரப்பதம் அதிகரிக்கும். கொங்கு, கிருஷ்ணகிரி மற்றும் தென்தமிழ்நாடு, டெல்டா வரை தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்யும். திண்டுக்கல், கரூர், திருப்பூர் உள்ளிட்ட வறண்ட இடங்களிலும் மழை பெய்யும்'' என கூறியுள்ளார்.

அதேபோல் இரவு 9.37 மணிக்கு இன்னொரு பதிவை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளார். அதில், ‛‛அடுத்த 24 மணிநேரத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டில் மழை பெய்வதற்கான நல்ல வானிலை நிலவி வருகிறத. ரேடார் நல்ல நிலையை நோக்கி திரும்புகிறது. சென்னையில் நிமிடத்தில் சூறைக்காற்று வீசலாம். சுழற்சி இருக்கும் வரை எங்கிருந்து வேண்டுமானாலும் மேகங்கள் உருவாகலாம். அதோடு இடைவிடாமல் மழை பெய்யும். உள்ளே வரும் பேண்ட்டுகளால் (மேகக்கூட்டங்கள்)தெற்கு மற்றும் டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்யும்'' என்று கூறியுள்ளார்.

இதனால் இரவில் பொதுமக்கள் யாரும் வெளியே செல்ல வேண்டும். ஏனென்றால் அதிகப்படியான மழை பெய்தால் அதில் சிக்கி கொள்ள வாய்ப்புள்ளது. இதனால் அவசர தேவைகளுக்கு மட்டுமே உரிய பாதுகாப்புடன் செல்வது நல்லது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட மக்கள் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+