தமிழ்நாட்டில் இன்று இங்கெல்லாம் கனமழை.. இங்கெல்லாம் மழை.. லிஸ்ட் போட்டு சொன்ன தமிழ்நாடு வெதர்மேன்
சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் செய்துள்ள போஸ்டில், ராமநாதபுரம் மற்றும் டூட்டி பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இன்று தென்தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும். கனமழை பெய்யும் பகுதிகள்- கன்னியாகுமரி, தேனி, தென்காசி, விருதுநகர், மதுரை, நெல்லை, திண்டுக்கல் மாவட்டங்களில் மழை பெய்யும்.

மழை பெய்யும் மாவட்டங்கள் - சிவகங்கை, ராமநாதபுரம், டூட்டி, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் மழை பெய்யும், என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வானிலை அறிவிப்பு: தமிழ்நாட்டில் அடுத்த ஏழு தினங்களுக்கான கனமழை முதல் லேசான கனமழை வரை பெய்யும் என்று வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை விடப்பட்டுஉள்ளது .
1. தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.
2. குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
14.05.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர், மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
கடந்த 24 மணி நேரத்திற்கான வானிலை தொகுப்பு: தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிக லேசான மழை பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
சிவகிரி (தென்காசி) 12, சிற்றாறு-1 (கன்னியாகுமரி), பெரியகுளம் (தேனி) தலா 8, எழுமலை (மதுரை), மண்டபம் (ராமநாதபுரம்) தலா 7. குப்பணம்பட்டி (மதுரை) 6, ஆண்டிபட்டி (தேனி), தாளவாடி (ஈரோடு). பார்வூட் (நீலகிரி) தலா 5. பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி), வால்பாறை PAP (கோயம்புத்தூர்). மன்னார்குடி (திருவாரூர்) தலா 4, வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), கூடலூர் பஜார் (நீலகிரி), திற்பரப்பு (கன்னியாகுமரி), அவினாசி (திருப்பூர்), மேல் கூடலூர் (நீலகிரி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), புத்தன் அணை (கன்னியாகுமரி), தங்கச்சிமடம் (ராமநாதபுரம்), பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்), உசிலம்பட்டி (மதுரை), வலங்கைமான் (திருவாரூர்) தலா 3, நடுவட்டம் (நீலகிரி), தேவாலா (நீலகிரி), தம்மம்பட்டி (சேலம்), பூதலூர் (குஞ்சாவூர்), குண்டேரிப்பள்ளம் (ஈரோடு). பில்லூர் அணை மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), தென்காசி (தென்காசி), அமராவதி அணை (திருப்பூர்), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), ஆலங்காயம் (திருப்பத்தூர்), பாலமோர் (கன்னியாகுமரி), சோலையார் (கோயம்புத்தூர்), காரைக்குடி (சிவகங்கை), ஏற்காடு (சேலம்), திருப்புவனம் (சிவகங்கை), பர்லியார் (நீலகிரி), கிளன்மார்கன் (நீலகிரி), கீழ்கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி), வைகை அணை (தேனி), குன்னூர் PTO (நீலகிரி), கோயம்புத்தூர் விமான நிலையம் (கோயம்புத்தூர்), பெருங்களூர் (புதுக்கோட்டை), சோத்துப்பாறை (தேனி), பொதுப் பணித்துறை மக்கினம்பட்டி (கோயம்புத்தூர்) தலா 2, சேத்தியாத்தோப்பு (கடலூர்), சூரங்குடி (தூத்துக்குடி), கிளானிலை (புதுக்கோட்டை), குடியியான்மலை (புதுக்கோட்டை), திருப்பூர் PWD (திருப்பூர்), சேலம் (சேலம்), மோகனூர் (நாமக்கல்), களியல் (கன்னியாகுமரி), சுருளக்கோடு (கன்னியாகுமரி), நம்பியூர் (ஈரோடு), குழித்துறை (கன்னியாகுமரி). பெருந்துறை (ஈரோடு), தல்லி (கிருஷ்ணகிரி), கடனா அணை (தென்காசி), அரிமளம் (புதுக்கோட்டை), போடிநாயக்கனூர் (தேனி), PWD வாரப்பட்டி (கோயம்புத்தூர்), தாலுகா அலுவலகம் திருப்பத்தூர் (திருப்பத்தூர்), அஞ்சட்டி (கிருஷ்ணகிரி), ஆயிக்குடி (தென்காசி), தென்காசி AWS (தென்காசி) தலா 1.
-
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications