இது மட்டும் நடக்கலைனா! பெரிய வெள்ள சேதத்தை தடுத்துட்டாங்க! தமிழ்நாடு அரசுக்கு.. மத்திய குழு பாராட்டு
சென்னை: தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டதால் மிகப்பெரிய வெள்ள சேதம் தடுக்கப்பட்டதாக மத்திய குழு தெரிவித்துள்ளது.
வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய சென்னை வந்தது மத்திய குழு. சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் இன்றும் அவர்கள் ஆலோசனை செய்ய உள்ளனர். சென்னை வெள்ள பாதிப்பு தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர்.

அவர்கள் இன்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை செய்ய உள்ளனர். இரண்டும் இரண்டாம் கட்ட ஆய்வுகள் களத்தில் நடக்க உள்ளது.
மத்திய குழு பாராட்டு: நேற்று முதல்நாள் முதல் கட்ட ஆய்விற்கு பின் பேசிய மத்திய குழு. 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை சிறப்பான முறையில் செய்துள்ளது; மாநில அரசு எடுக்கும் முயற்சியில் நான் மிகவும் திருப்தியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். பாதிப்புகளில் இருந்து மக்கள் மீள மாநில அரசின் முயற்சிக்கு பாராட்டுக்கள் என்று சென்னையில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தபின் மத்திய குழு பேட்டி அளித்துள்ளது.
மீண்டும் பாராட்டும்; இந்த நிலையில்தான் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டதால் மிகப்பெரிய வெள்ள சேதம் தடுக்கப்பட்டதாக மத்திய குழு தெரிவித்துள்ளது. அதில், செம்பரம்பாக்கத்தை உரிய நேரத்தில் நீர் திறந்துவிட்டதால் சேதம் தவிர்க்கப்பட்டு உள்ளது. சென்னை, புறநகர்ப் பகுதிகளில் மழைநீர் வடிகாலுக்கான சிறப்புத் திட்டம் தேவைப்படுகிறது; கனமழையின்போது பொதுமக்கள் பாதிக்காமல் இருக்க விரிவான நீண்டகால திட்டமிடல் தேவை.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உரியநேரத்தில் நீர் திறக்கப்பட்டதால் சேதம் தவிர்க்கப்பட்டு உள்ளது என்று செம்பரம்பாக்கம் ஏரியில் ஆய்வு செய்தபின் மத்தியக்குழுத் தலைவர் குணால் சத்யார்த்தி பேட்டி அளித்துள்ளார்.
மத்திய குழு: மிக்ஜாம் புயல் - மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நிவாரணப்பணிகளை நேரடியாக ஆய்வு செய்து மதிப்பிடுவதற்காக மத்திய அரசின் குழு இரண்டு நாட்களுக்கு முன் தமிழ்நாடு வருகை செய்ய உள்ளது. புயல், வெள்ள பாதிப்புகளை மதிப்பீடு செய்ய சென்னை வந்தது மத்திய அரசின் குழு. இரண்டு நாள் ஆய்வுக்கு பிறகு தலைமைச் செயலாளருடன் ஆலோசனை செய்ய உள்ளது.

வெள்ள பாதிப்புகள் குறித்த இறுதி அறிக்கையைத் தமிழ்நாடு அரசு சமர்ப்பித்த பிறகு, அதற்கான விரிவான மதிப்பீட்டை இக்குழு தயாரிக்க உள்ளது. அதிகாரிகள் அளிக்கும் அறிக்கையின்படி.. நிவாரணம் வழங்க அரசு முடிவு செய்துள்ளதாம். ஏற்கனவே 5 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு நிவாரணமாக கேட்டுள்ளது. இந்த நிலையில்தான் தமிழ்நாடு அரசு மக்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இதில் 500 கோடி மட்டுமே கொடுக்கப்பட்டு உள்ள நிலையில் அறிக்கைக்கு பின் மொத்த தொகை வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
மத்திய அரசு நிதி: இதற்காக மத்திய அரசிடம் 5000 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு கேட்டது. ஆனால் மத்திய அரசு நிவாரண நிதி + சென்னை வடிகால் திட்டத்திற்கு சேர்த்து 1010 கோடி ரூபாய் நிதி மட்டுமே கொடுத்துள்ளது. நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலினுளுடன், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னையில் சந்திப்பு நடத்தினார். பாதிப்புகளை சீர் செய்திட தேவையான நிதியினை விரைவில் விடுவிக்க தமிழ்நாடு முதலமைச்சர் கோரிக்கை விடுத்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications