இது முதல் சுற்று மழைதான்! ஆனாலும்.. குற்றாலம், திற்பரப்பு போகாதீங்க! டெல்டா வெதர்மேன் வார்னிங்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: டெல்டா மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் நேற்றிரவு தொடங்கி கனமழை பெய்து வரும் நிலையில்.. கனமழை நீடிக்கும் என டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் கணித்திருக்கிறார்.

இது குறித்து அவர் தனது x பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, "இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது மன்னார் வளைகுடா மற்றும் வட இலங்கை பகுதியில் நிலவுகிறது.

rain Courtallam Tirparappu Delta Weatherman

இதன் காரணமாக தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார்கள்.

தாழ்வு பகுதி மன்னார் வளைகுடா நோக்கி நகர்வதன் காரணமாக இன்று தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை எதிர்பார்க்கலாம். வடகடலோர மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்களில் விட்டு விட்டு மழை எதிர்பார்க்கலாம். தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பரவலாக கனமழையும் ஒருசில இடங்களில் மிக பலத்த மழையும் பதிவாக கூடும்.

அடுத்த 3-4 நாட்களுக்கு குற்றாலம், திற்பரப்பு அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதால் சுற்றுலா பயணிகள் அருவிகளுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது. உள் மாவட்டங்கள், மேற்கு மவட்டங்களிலும் இன்று பிற்பகல் முதல் மழை பரவலாகும். காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக இந்த முதல் சுற்று மழை அக் 25 ம் தேதி வரை நீடிக்க கூடும்" என தெரிவித்திருக்கிறார். இன்று காலை 7.30 மணி நிலவரப்படி இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

கனமழை காரணமாக, கேரளா-தமிழ்நாடு எல்லையில் மண்சரிவு ஏற்பட்டிருக்கிறது. திருவனந்தபுரம்-நாகர்கோவில் ரயில் பாதையில் பாறசாலை எனும் பகுதியில் மண் சரிவு ஏற்பட்டிருக்கிறது. இதனால் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து திருவனந்தபுரத்துக்கு வேலைக்கு செல்வோர்கள் இந்த ரயில் பாதையைதான் நம்பியிருக்கிறார்கள். ஆனால், தற்போது ரயில் சேவை நிறுத்தப்பட்டிருப்பதால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

அதேபோல குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. குற்றாலம் பழைய அருவி, மெயின் அருவி, ஐந்தருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+