அடுத்த 2 மணி நேரம் வெளுக்க போகும் மழை.. கோவை டூ தென்காசி வரை.. 20 மாவட்டங்களுக்கு அலர்ட்!
சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரம் கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி என 20 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியையொட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. தென்காசி, நீலகிரி மாவட்டங்களில் ஒருசில் இடங்களில் மழை பெய்கிறது.

வடதமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், தென்தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுவையிலும் மழை பெய்துள்ளது. காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. வெப்பநிலையை பொறுத்தவரை அதிகபட்சமாக தஞ்சாவூரி 37.0° செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக ஈரோட்டில் 17.8 'செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
இந்த நிலையில் அடுத்த 2 மணி நேரத்தில் அதாவது இன்று இரவு 7 மணி வரை கோவை, திருப்பூர், மதுரை, தென்காசி உள்பட 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆவ்யு மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, கரூர், நாமக்கல், சேலம், மதுரை, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக வானிலை மையம் வெளியிட்டுள்ள ஒரு வார அப்டேட்டில் கூறப்பட்டிருப்பதாவது:- நேற்று 31-08-2024) மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆய்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று காலை (31-08-2024) 05:30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மேலும் 08:30 மணி அளவில் அதே பகுதியில், விசாகபட்டினத்திற்கு (ஆந்திர பிரதேசம்) கிழக்கே 120 கி.மீ தொலைவிலும், கலிங்கபட்டினத்தின்(ஆந்திர பிரதேசம்) தெற்கு-தென்கிழக்கே 80 கி.மீ தொலைவிலும், கோபால்டீர் (ஒடிசா) தெற்கு தென்மேற்காக 180 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது மேலும், வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, விசாகப்பட்டினம் கோபால்பூர் இடையே கலிங்கபட்டினத்திற்கு அருகில் இன்று (31-08-2024) நள்ளிரவு கரையை கடக்க கூடும். 31.08.2024 முதல் 02.09.2024 வரை: தமிழகத்தில் ஓரிய இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வடதமிழகத்தில் வலுவான தரைக்காற்று 30 40 மீ வேகத்தில் வீசக்கூடும்.
03.09.2024 முதல் 06.09.2024 வயை தமிழகத்தில் உரிய இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் வருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட் வெப்பநிலை 25-26* செல்சியஸை வட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை வட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 செல்சியஸை லட்டி சுட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications