அடுத்த 2 மணி நேரத்திற்கு 14 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் மழை.. வானிலை மையம் அலர்ட்
சென்னை: தமிழகத்தில் கடந்த 16 ஆம் தேதி முதல் வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை வெளுத்து வாங்கி வருகிறது. கனமழை காரணமாக செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, கடலூர், தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, சேலம், புதுக்கோட்டை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications