வெயிலுக்கு லீவு.. தமிழகத்தில் மதியம் 1 மணி வரைக்கு இங்கெல்லாம் மழை கொட்டும்.. வானிலை மையம் அப்டேட்!
சென்னை: தமிழகத்தில் இன்று சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு (TN Weather Update) உள்ளதாகவும், வரும் 10 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. இந்த நிலையில் இன்று மதியம் 1 மணி வரை தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. பகல் நேரங்களில் வெயில் கொளுத்தி எடுக்கிறது. ஆனால் மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளை ஒட்டியுள்ள மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

கோவை, தென்காசியில் மழைக்கு சான்ஸ்
நேற்றும் சென்னையில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. இந்த நிலையில் இன்று மதியம் ஒரு மணி வரை 2 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது இன்று மதியம் 1 மணி வரை கோவை மாவட்டத்தில் மலைப்பகுதிகளை ஒட்டியுள்ள இடங்கள் மற்றும் தென்காசி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது.
பலத்த தரைக்காற்று வீசும்
முன்னதாக வானிலை மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில் இன்று சென்னையில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், தமிழகத்தில் பலத்த தரைக்காற்றுடன் கூடிய (50- 60 கிமீ வேகம்) லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும், வெப்பநிலையை பொறுத்தவரை 2 முதல் 3 டிகிரி இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று தெரிவித்து இருந்தது.
முன்னதாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- " இன்று 04-09-2025 மற்றும் நாளை 05-09-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 06-09-2025 மற்றும் 07-09-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு
8 ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 9 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வெப்பநிலையை பொறுத்தவரை இன்றும், நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34- 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications