Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொஞ்சம் கொஞ்சமாக உருவாகுதே.. இன்று தொடங்கும் கச்சேரி.. தமிழ்நாட்டிற்கு வந்த வானிலை வார்னிங்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வருவதாக சென்னை ரெயின்ஸ் வானிலை அமைப்பு கூறி உள்ளது.

இது தொடர்பாக அவர்கள் செய்துள்ள போஸ்டில், ஆந்திர பிரதேசம், ஒடிசா கடலோர பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வருகிறது. இங்கே நல்ல மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனால் சென்னையில் இன்றும் அல்லது நாளையும் மழை பெய்யும். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நல்ல கனமழை பெய்ய வாய்ப்புகள் உள்ளன, என்று சென்னை ரெயின்ஸ் வானிலை அமைப்பு கூறி உள்ளது.

மேலும். வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Today and Tomorrow Tamil Nadu going to witness heavy rain in most parts says Chennai Rains

இதனால் நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது. இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

24.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

25.07.2023 மற்றும் 26.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 27.07.2023 முதல் 29.07.2023 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னதுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்);
அவலாஞ்சி (நீலகிரி) 14, கூடலூர் பஜார் (நீலகிரி) 8, மேல் கூடலூர் (நீலகிரி), சின்னகல்லாறு (கோயம்புத்தூர்) தலா 7, வொர்த் எஸ்டேட் (நீலகிரி), நவெட்டம் (நீலகிரி), தாலுகா அலுவலகம் பந்ததூர் (நீலகிரி), வால்பாறை FTO (கோயம்புத்தூர்) தலா 5, பார்வூட் (நீலகிரி), மேல் பவானி (நீலகிரி), ஹரிசன் லிமிடெட் செருமல்லி (நீலகிரி), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), சோலையாறு (கோயம்புத்தூர்) தலா 5. சின்கோனா (கோயம்புத்தூர்). வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), தேவாலா (நீலகிரி) தலா 4. சிறுவாணி அடிவாரம் (கோயம்புத்தூர்), பொதுப்பணித்துறை மாக்கினாம்பட்டி (கோயம்புத்தூர்).

கிளென்மார்கன் (நீலகிரி), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்). புழல் ARG (திருவள்ளூர்) தலா 3. கொரட்டூர் (திருவள்ளூர்). பண்டி (திருவள்ளூர்), திருத்தணி PTO (திருவள்ளூர்), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்) தலா 2, பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), திருத்தணி (திருவள்ளூர்), அரக்கோணம் (இராணிப்பேட்டை), ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர்), ஆர்.கே.பேட்டை (திருவள்ளூர்), சோளிங்கர் (இராணிப்பேட்டை).

சோமவரம் (திருவள்ளர்). மாதவரம் AWS (திருவள்ளூர்). எமரால்டு (நீலகிரி மாவட்டம்), திருவள்ளூர்,திருவாலங்காடு (திருவள்ளூர்). பொன்னேரி (திருவள்ளூர்), ஆனைமலை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), டிஜிபி அலுவலகம் (சென்னை). சிடி மருத்துவமனை தொண்டையார்பேட்டை (சென்னை). பெரம்பூர் (சென்னை), சென்னை நுங்கம்பாக்கம், அம்பத்தூர் (திருவள்ளூர்). திகர் IVK AWS (திருவள்ளூர்), ஆவடி (திருவள்ளூர்), அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை), அண்ணா பல்கலைக்கழகம் ARG (சென்னை), ஐந்தா பாலம் (நீலகிரி), பெரியார் (தேனி). ஆழியாறு (கோயம்புத்தூர்). ஏசிஎஸ் மளத்துவக் கல்லூரி (காஞ்சிபுரம்) தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை;
வங்கக்கடல் பகுதிகள்:

23.07.2023: தமிழக கடலோரப்பகுதிகள். மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய மைரிக்கடல் பகுதிகள், ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

24.07.2023. தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைளுடா மற்றும் அதனை ஓட்டிய குமரிக்கடல் பகுதிகள், ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள். இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு - தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
25.07.2023.மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

Today and Tomorrow Tamil Nadu going to witness heavy rain in most parts says Chennai Rains

ஆந்திர கடலோரப்பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள். மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய மைரிக்கடல் பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை மட்டிய தென் மேற்கு தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

26.07.2023 &. 27.07.2023. மத்தியமேற்ற வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆந்திர கடலோரப்பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள். மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகள். இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை சுட்டிய தென் மேற்கு -தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்:
23.07.2023 முதல் 27.07.2023 வரை. மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இலட்சத்தீவு பகுதிகள், கேரள-கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+