Today weather: மண்டை காயப் போகுது மதுரை.. அடுப்பில்லாமல் ஆஃபாயிலே போடலாம்! மழை எங்கே? வெதர்மேன் சொன்ன தகவல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று வறண்ட நாளாகவே இருக்கும் எனவும் ஒரு சில இடங்களில் மழை பெய்யலாம் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ளார். இந்தியாவின் வெப்பமான நகரங்களை மதுரை முன்னணி வகிக்கும் நிலையில் இன்றும் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறியிருக்கிறார். மேலும் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் கணித்துள்ளார்.

தமிழகத்தில் மே மாதத்திற்கு பிறகு வெயில் மழை என வானிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை வலுவிழந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாகி வருகிறது.

அடுத்தடுத்து சென்னை உள்ளிட்ட கடலோர பகுதிகளை ஒட்டியுள்ள மாவட்டங்களில் புயல்கள் உருவாகும் சூழல் ஏற்பட்டிருக்கும் நிலையில், வட மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை முற்றிலும் விடை கொடுத்திருக்கும் நிலையில் தற்போது மழயை எதிர்பார்த்து பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.

Today weather

வானிலை

ஆனால் வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. போதிய மழைப் பொழிவின்றி விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது. விரைவில் பருவமழையை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் இன்றைய தினம் சென்னையில் வறண்ட வானிலேயே தமிழகத்தில் நிலவும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ளார். மேலும் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் கணித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்," சென்னை KTCC எனப்படும் காஞ்சிபுரம், சென்னைம் திருவள்ளூர், செங்கல்பட்டு பகுதிகளில் இன்று வறண்ட நாளாகவே இருக்கும். வெப்பநிலை இயல்பை விட 35-35.5°C அதிகமாக இருக்கும்.

தமிழகம் மழை

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். சனிக்கிழமை மாலை / இரவு மிகவும் நல்ல இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். தமிழ்நாட்டில் கன்னியாகுமரியில் பருவமழை காரணமாக கனமழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளது. நெல்லையில் உள்ள மாஞ்சோலையிலும் கனமழை பெய்யக்கூடும். செப்டம்பர் வரை இந்தியாவில் வெப்பமானதாக பாளையங்கோட்டை ஆதிக்கம் செலுத்திய நிலையில், மதுரை இப்போது இந்தியாவின் வெப்பமான இடங்களில் ஒன்றாக முன்னிலை வகிக்கிறது. மதுரை ஏர்போர்ட் சுமார் 38°C, மதுரை நகரம் சுமார் 37°C, மற்றும் திருச்சி விமான நிலையத்தில் சுமார் 37°C வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இன்று மழைக்கு வாய்ப்பு

இன்று தமிழ்நாட்டில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், கடலூர், புதுச்சேரி, காரைக்கால், பெரம்பலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, ஈரோடு, நீலகிரி, கள்ளக்குறிச்சி, தர்மபுரி, மதுரை, சிவகங்கை ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.

பெங்களூரு வானிலை

கேரளா - தெற்கு கேரளத்தின் மாவட்டங்களில் பரவலாக பருவமழை பெய்யும், திருச்சூர், எர்ணாகுளம், இடுக்கி, கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, திருவனந்தபுரம் பகுதிகளில் இன்று நல்ல மழை பெய்யும். மும்பையில், பெரும்பாலும் வறண்ட, மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட மழை பெய்ய வாய்ப்புள்ளது. பெங்களூருவில் பல இடங்களில் மாலை மற்றும் இரவு மழை பெய்யும். ஹைதராபாத் - இன்று இனிமையான மழை பெய்யும். நாளை முதல் மழை தொடங்கி, சனிக்கிழமையாக கனமழை பெய்யும். யாழ்ப்பாணம் - டெல்டா பெல்ட்டிலிருந்து நகர்ந்து வரும் புயல்களால் அதிகாலை நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது." என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+