தூத்துக்குடியே மிதக்குது! எல்லையை கூட நெருங்க முடியலை! இதில் டோல்கேட் வசூல் வேற.. மக்கள் வேதனை
தூத்துக்குடி: தூத்துக்குடியில் மழை வெள்ள பேரிடர் காலத்திலும் டோல்கேட்டில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமடைந்துள்ளது. தென் மாவட்டங்களில் சனிக்கிழமை இரவு முதலே மழை பெய்து வருகிறது. இதனால் தென் தமிழகமான குமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

பல இடங்களில் நீர்த் தேக்கங்கள், கன்மாய்கள், கால்வாய்கள் உடைந்து ஊருக்குள் வெள்ள நீர் புகுந்துவிட்டது. பேருந்து நிலையம், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
இந்த நிலையில் நேற்று தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அது போல் விருதுநகர், மதுரை மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டது. இந்த நிலையில் குமரியில் நிலவி வந்த மேலடுக்கு சுழற்சியானது இன்று விலகி அரபிக் கடல் பக்கம் சென்றுவிட்டது.
இதனால் இன்று நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மழை குறைந்தது. ஆனாலும் வெள்ளம் வடிந்த பாடில்லை என்கிறார்கள். இதனால் உணவு, பால், குடிநீர் இல்லாத நிலை இருக்கிறது. பலருக்கு உடைகளை கூட எடுத்து வர முடியாமல் தவித்து வருகிறார்கள். தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எப்போதும் வென்றான் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இந்த நிலையில் வரும் ஓரிரு வாகனங்கள் சென்றாலும் தூத்துக்குடி விமான நிலையம் அருகே உள்ள டோல்கேட்டில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. தூத்துக்குடிக்குள்ளே வாகனங்கள் போக முடியாத அளவுக்கு தண்ணீர் தேங்கியிருக்கும் போது டோல்கேட் வழியாக வரும் ஓரிரு வாகனங்களுக்கும் சுங்க கட்டணம் வசூலிப்பதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
இந்த நிலையில் வரும் ஓரிரு வாகனங்கங்கள் சென்றாலும் தூத்துக்குடி விமான நிலையம் அருகே உள்ள டோல்கேட்டில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. தூத்துக்குடிக்குள்ளே வாகனங்கள் போக முடியாத அளவுக்கு தண்ணீர் தேங்கியிருக்கும் போது டோல்கேட் வழியாக வரும் ஓரிரு வாகனங்களுக்கும் சுங்க கட்டணம் வசூலிப்பதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications