அக்னி நட்சத்திரத்தை விடுங்க.. அடுத்த 3 மணி நேரம் 10 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை! ஜில் அப்டேட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் கோடை வெயில் என்ன தான் ஒரு பக்கம் வெளுத்து வாங்கினாலும்.. இன்னொரு பக்கம் ஓரிரு இடங்களில் நல்ல மழையும் பெய்து வருகிறது. மாலை நேரம் பெய்யும் இந்த மழையால் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான வானிலை நிலவுகிறது. இதற்கிடையே இன்றிரவு 7 மணி வரை தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கோடை வெயில் உச்சத்தில் இருக்கிறது. அக்னி நட்சத்திரமும் கூட நாளை மறுநாள் அதாவது மே 4ம் தேதி ஆரம்பிக்கும் நிலையில், பல இடங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டிப் பதிவாகி வருகிறது. இதனால் வெளியே சென்றாலேயே எப்போ தான் வீட்டுக்குத் திரும்புவோம் என மக்கள் நினைக்கும் அளவுக்கு நிலைமை மோசமாக இருக்கிறது. பல்வேறு இடங்களிலும் இதே நிலைமை தான்.

summer rain

மழை

அதேநேரம் ஓரிரு இடங்களில் கோடை மழையும் வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 2 வாரங்களாக வெயில் படுத்தி எடுத்த கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்களில் நேற்று திடீரென மழை பெய்தது. குறிப்பாக கிருஷ்ணகிரியில் விடாமல் கொட்டிய மழையால் இரவில் சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டது. பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. 15+ மரங்கள் கூட விழுந்தது. அந்தளவுக்கு நிலைமை மோசமானது.

10 மாவட்டங்களில் மழை

மழை பாதிப்புகளை சீராக்கும் பணிகளில் மாவட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே அடுத்த 3 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் நல்ல மழை வெளுத்து வாங்கப் போவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதாவது இரவு ஏழு மணி வரை வேலூர், திருவண்ணாமலை, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருநுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேபோல வேலூர், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வானிலை மையம்

முன்னதாக இன்று வானிலை மையம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், "தென்னிந்தியப் பகுதிகளின் மேல், வளிமண்டலக் கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்குத் திசைக் காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால் இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மே 4 மற்றும் 5ம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மே 6ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, மயிலாடுதுறை, நாகபட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை கிளைமேட்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று (02-05-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை (03-05-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது" என்று வானிலை மையம் கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+