சென்னையில் திடீரென இரவில் வெளுத்து வாங்கிய மழை.. ஜில் கிளைமேட்டால் மக்கள் மகிழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் இன்று இரவு 9.30 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. கேகே நகர், தியாகராய நகர், வடபழனி, அசோக் பில்லர், சூளைமேடு, பெரம்பூர், மாதவரம், புழல், மூலக்கடை பகுதிகளில் மழை பெய்தது. இதேபோன்று செங்கல்பட்டு மற்றும் அச்சரப்பாக்கம், மேல்மருவத்தூர் பகுதிகளிலும் மழை பெய்தது.

தமிழகத்தில் கடந்த வாரம் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டியது. கடந்த 3 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. படிப்படியாக வெயில் அதிகரித்தாலும் கூட, மாலை நேரங்களில் ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் தகிக்கும் வெயிலுக்கு இதமான கிளைமேட்டாக மாலை நேரங்கள் மாறிப்போகும் சூழல் இருந்தது.

unexpected-downpour-hits-chennai-at-night-pleasant-chill-delights-citizens

குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாகவே இது போன்ற கிளைமேட் தான் இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்றும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காலை முதல் மதியம் வரை வெயில் வெளுத்து வாங்கியது. ஆனால் மதியத்திற்கு பிறகு ஒருசில இடங்களில் மழை பெய்தது. ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது.

இந்த நிலையில் இன்று இரவு 9.30 மணியளவிள் சென்னையில் மழை கொட்ட தொடங்கியது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது. சென்னையில் எழும்பூர், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், கேகே நகர், தியாகராய நகர், வடபழனி, அசோக் பில்லர், சூளைமேடு, பெரம்பூர், மாதவரம், புழல், மூலக்கடை பகுதிகளில் மழை பெய்தது. இதேபோன்று செங்கல்பட்டு மற்றும் அச்சரப்பாக்கம், மேல்மருவத்தூர் பகுதிகளிலும் மழை பெய்தது.

இதனால் பல்வேறு சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பகல் நேரங்களில் வெயிலால் தகைத்த தலைநகர் சென்னை இரவில் பெய்த மழையால் குளிர்ந்து போனது. ஜில்லென மாறிப்போன சென்னை நகரத்தால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+