தமிழகத்திலேயே இப்படி ஒரு கிளைமேட்டா.. ஜீரோ டிகிரியில் வெப்பம்.. இது சரியில்லையே.. நிபுணர்கள் கவலை
சென்னை: நீலகிரி மாவடத்தில் வழக்கதிற்கு மாறாக கடுமையான குளிர் நிலவுகிறது. உறைபனி அளவுக்கு வெப்ப நிலை சென்று இருப்பதால் மக்கள் பல்வேறு உடல் நல பாதிப்புகளையும் எதிர்கொண்டு வருவதாக அங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறான அளவுக்கு கடுமையான குளிர் நிலவுகிறது. அந்த மாவட்டத்தின் ஊட்டி உள்ளிட்ட இடங்களில் எப்போதும் கடுமையான குளிர் நிலவும். இருந்தாலும் நடப்பு ஆண்டு வழக்கத்திற்கு மாறாக உறைபனி அளவுக்கு வெப்ப நிலை நிலவுகிறது. நீலகிரி மாவட்டத்தில் இன்றும் நாளையும் சில இடங்களில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையமும் தெரிவித்துள்ளது.

கடும் பனிமூட்டத்துடன் வாட்டி வதைக்கும் குளிரால் மக்கள் கடுமையான இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர். பசுமையான புல்வெளிகளிலும் எங்கும் வெண்மையாக காட்சி அளிக்கிறது. சில மீட்டர்கள் தொலைவு மட்டுமே காலை வேளையில் கண்ணுக்கு புலப்படுகின்றன. இதனால், நீலகிரி மாவட்டத்திற்கு வரும் வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். உள்ளூர் மக்களும் கடுமையான குளிரால் உடல் நல பிரச்சினைகளையும் சந்தித்து வருகிறார்கள்.
விவசாயிகள் கவலை: இதுபோன்ற தட்பவெப்ப நிலை வழக்கத்திற்கு மாறானது என்று கூறும் அப்பகுதி மக்கள், குளிரில் இருந்து தப்பிப்பதற்காக தீ மூட்டி குளிர் காய்ந்து வருகிறார்கள். உதகமண்டலத்தில் உள்ள காந்தல் மற்றும் தலைகுந்தம் பகுதியில் வெப்ப நிலை 1 டிகிரி செல்சியஸ் ஆக பதிவானது. போட்டானிக்கல் கார்டன் பகுதியில் 2 டிகிரி செல்சியசுக்கும் சற்றும் மேலே வெப்ப நிலை நிலவியது.
வழக்கத்திற்கு மாறாக நிலவும் இந்த கிளைமேட் அப்பகுதி மக்களுக்கும் சூழலியல் ஆர்வலர்களுக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உறைபனி அளவுக்கு வெப்ப நிலை குறைந்துள்ளது விவசாயத்தையும் கடுமையாக பாதிக்கும் என்று விவசாயிகள் கவலை தெரிவித்தனர். நீலகிரி சுற்றுச்சூழல் சமூக அறக்கட்டளையின் (NEST) வி சிவதாஸ் இது தொடர்பாக கூறியதாவது:-
மிகவும் சவாலானது: உலக வெப்பமயமாக்கல் மற்றும் எல் நினோ தாக்கம் காரணமாக இத்தகைய கால நிலை மாற்றம் ஏற்பட்டு இருக்கலாம். குளிர்காலம் தொடங்குவதற்கு கொஞ்சம் தாமதமானது. தற்போது நிலவும் காலை நிலை மாற்றம் மிகவும் சவாலானது. எனவே இது தொடர்பாக ஆய்வு நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அதேபோல், வழக்கத்திற்கு மாறான அளவுக்கு குளிர் நிலவுவதால் தேயிலை பயிரிடுவதும் பாதிப்பை சந்தித்து இருப்பதாக தேயிலை தோட்ட தொழிற்சங்கங்களின் செயலர் ஆர். சுகுமாரன் தெரிவித்தார்.
தேயிலை உற்பத்தி பாதிப்பு: இது தொடர்பாக ஆர். சுகுமாரன் கூறுகையில், "நீலகிரியில் அதிக அளவு தேயிலை தோட்டங்கள் உள்ளன. தற்போதைய காலநிலையால் தேயிலை தோட்டங்களும் கடும் சவாலான சூழலை எதிர்கொண்டுள்ளது. டிசம்பரில் பெய்த கனமழை மற்றும் அதைத்தொடர்ந்து கடும் குளிர் ஆகியவை தேயிலை பயிரிடுவதை பாதித்துள்ளது. வரும் மாதங்களில் தேயிலை உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது என அஞ்சுகிறோம்" என்றார்.
உள்ளூர் மக்களும் இருசக்கர வாகனங்களில் எல்லாம் பயணிக்க முடியாத அளவுக்கு குளிர் இருப்பதாகவும் மூச்சு விடுவதில் சிரமம், கடுமையான தலைவலி, காய்ச்சல் போன்ற உடல் நல பாதிப்புகள் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications