நடுக்கும் குளிர்.. வேலூருக்கு உச்சபட்ச அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே!
வேலூர்: பருவமழை நிறைவடைந்திருக்கும் நிலையில், தமிழகத்தில் குளிர் வாட்ட தொடங்கியிருக்கிறது. இந்நிலையில், ஒன்றுபட்ட வேலூர் மாவட்டத்திற்கு பனிமூட்டம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "லட்சத்தீவு - கேரளா மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,

வேலூருக்கு வார்னிங்
இன்று, தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். குறிப்பாக கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும். அதேபோல ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர் மாவட்டங்களில் அதிகாலை வேளையில் ஒரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
நாளை எப்படி இருக்கும்?
பிப்.1ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும். ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர் மாவட்டங்களில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
அடுத்த ஒரு வாரம்
பிப்.2ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.
மழைக்கான வாய்ப்பு
பிப்.3ம் தேதி தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.
பிப்.4ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.
பிப்.5ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.
பிப்.6ம் தேதி தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
குறைந்தபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
24 மணி நேர குறைந்தபட்ச வெப்பநிலை மாறுதலை பொறுத்தவரை, இன்றும் நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு.
பிப்.2 முதல் 4ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை ஒரிரு இடங்களில் 1-2" செல்சியஸ் வரை சற்று உயரக்கூடும்.
இயல்பு நிலையிலிருந்து குறைந்தபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:
இன்றும் நாளையும், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கக்கூடும். பிப்.2 முதல் 4ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 1-2° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இன்று (31-01-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (01-02-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
-
நான் அடிச்ச 10 பேருமே டானுங்க தான்.. தமிழக அரசியலை புரட்டிப் போட்ட விஜய்! சத்தமில்லாமல் தவெக சாதனை! -
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
சொத்து பதிவு பிரச்சனைக்கு தீர்வு.. STAR 3.0 மூலம் தமிழக பதிவுத்துறை கொண்டுவந்த புதிய வசதி -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
இலவசம் அரசு பஸ்களில்.. இப்போ எங்கே தெரியுமா? நம்ம தமிழகத்தின் விடியல் பயணம்தான் இதில் பெஸ்ட் -
23 தொகுதிகளில் காங்கிரஸ் தோல்வி! தேர்தல் நிதியில் முறைகேடு? ஐவர் குழு அமைப்பு! வேட்பாளர்கள் ஷாக் -
தாய்மாமன் என வசனம் பேசிய விஜய்.. குழந்தைகள் பாலியல் மிருகங்களிடம் சீரழிவதை வேடிக்கை பார்க்கிறாரா? -
பயிர் கடன் ரூ.3 லட்சம்.. ஆனால் தள்ளுபடி வெறும் ரூ.50 ஆயிரமா? விஜய் அறிவிப்பால் விவசாயிகள் ஏமாற்றம் -
வேலூரில் தவெக நிர்வாகி மாமூல் கேட்பதாக புகார்.. செங்கல் சூளை உரிமையாளர்கள் சாலை மறியல் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
தங்க நகை கடன் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் டாப் 5 தென் மாநிலங்கள்! தமிழகத்திற்கு எத்தனையாவது இடம்?












Click it and Unblock the Notifications