வேலூரை மொத்தமாக நனைத்த கோடை மழை.. மதியம் வரைக்கும் 104 டிகிரி வெயில்.. மாலையில் கனமழை!
வேலூர்: தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து பதிவாகியிருந்தது. குறிப்பாக வேலூரில் 104 டிகிரி வரை வெயில் பதிவாகியிருந்தது. இந்நிலையில், இன்று திடீரென கோடை மழை பெய்திருக்கிறது.
வேலூர் நகர், காட்பாடி, சத்துவாச்சாரி, ஆட்சியர் அலுவலகம் என பரவலாக மழை பெய்திருக்கிறது. திடீர் மழையால் மக்கள் ஓரளவு நிம்மதியடைந்திருக்கின்றனர்.

வேலூரை பொறுத்தவரை, வெயிலுக்கு பெயர் பெற்றதாகும். ஒவ்வொரு கோடையின்போதும் வெயிலின் தாக்கம் தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களை விட, இங்குதான் அதிகமாக இருக்கும். அந்த வகையில், இன்று மதியம் வேலூரில் 104 டிகிரி அளவுக்கு வெயில் பதிவாகியிருந்து. இந்நிலையில், திடீரென கனமழை பெய்திருக்கிறது. திடீர் மழை காரணமாக மக்கள் ஓரளவு நிம்மதியடைந்திருக்கின்றனர்.
முன்னதாக இன்று மதியம் சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்த அறிவிப்பில், "சுமார் 0.9 கிமீ உயரத்தில் மரத்வாடா முதல் தென்தமிழகம் வரை உள் கர்நாடகா வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.
04-04-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
05-04-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
06-04-2026: தென்தமிழகதில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். விருதுநகர், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
07-04-2026: தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
08-04-2026 தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
09-04-2026 மற்றும் 10-04-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications