பிச்சுக்கிட்டு கொட்டப்போகும் மிக கனமழை.. 4 மாவட்டங்களுக்கு அலர்ட்! 16 மாவட்டங்களில் கனமழை பெய்யும்
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
குமரிக்கடல், தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு - மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, இராமநாதபுரம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, திருவள்ளூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

22.11.2023: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, இராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
23.11.2023: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
24.11.2023: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 25.11.2023 முதல் 27.11.2023 வரை: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான / கனமழை பெய்யக்கூடும். இன்றைய வெப்பநிலை 24-26 டிகிரி செல்சியஸாக இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
டிஜிபி அலுவலகம் (சென்னை), பொன்னேரி (திருவள்ளூர்) தலா 9, சென்னை ஆட்சியர் அலுவலகம் (சென்னை) 8, CD மருத்துவமனை தண்டையார்பேட்டை (சென்னை), மண்டலம் 04 தண்டையார்பேட்டை (சென்னை), சென்னை நுங்கம்பாக்கம் (சென்னை), அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை), சென்னை (N) AWS (சென்னை), மண்டலம் 05 ராயபுரம் (சென்னை) 7, அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) தலா 7, மண்டலம் 02 மணலி (சென்னை), மண்டலம் 09 ஐஸ் ஹவுஸ் (சென்னை), எண்ணூர் AWS (சென்னை), பெரம்பூர் (சென்னை), சோழிங்கநல்லூர் (சென்னை), மண்டலம் 08 அண்ணாநகர் (சென்னை) தலா 6, மண்டலம் 01 திருவொற்றியூர் (சென்னை), மண்டலம் 06 திரு.வி.க.நகர் (சென்னை), மண்டலம் 01 கத்திவாக்கம் (சென்னை), செங்குன்றம் (திருவள்ளூர்), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), மண்டலம் 02 D15 மணலி (சென்னை), மண்டலம் 09 தேனாம்பேட்டை (சென்னை), மண்டலம் 05 GCC (சென்னை) தலா 5, மண்டலம் 08 மலர் காலனி (சென்னை), மண்டலம் 06 D65 கொளத்தூர் (சென்னை), அம்பத்தூர் (சென்னை), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்), சோழவரம் (திருவள்ளூர்) தலா 4, புழல் ARG (திருவள்ளூர்), மண்டலம் 15 உத்தண்டி (சென்னை), மண்டலம் 03 புழல் (சென்னை), காரைக்கால் (காரைக்கால்), மண்டலம் 13 அடையார் சுற்றுச்சூழல் பூங்கா (சென்னை), செய்யூர் (செங்கல்பட்டு), மண்டலம் 07 அம்பத்தூர் (சென்னை), மண்டலம் 11 வளசரவாக்கம் (சென்னை), மண்டலம் 11 U32 மதுரவாயல் (சென்னை), திருக்குவளை (நாகப்பட்டினம்), மண்டலம் 15 சோழிங்கநல்லூர் (சென்னை), மண்டலம் 13 அடையார் (சென்னை), மண்டலம் 07 U18 D81 வானகரம் (சென்னை), தரமணி ARG (சென்னை), மண்டலம் 10 கோடம்பாக்கம் (சென்னை), கேளம்பாக்கம் (செங்கல்பட்டு) தலா 3, மண்டலம் 14 U41 பெருங்குடி (சென்னை), கொரட்டூர் (திருவள்ளூர்), மண்டலம் 03 மாதவரம் (சென்னை), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), மண்டலம் 12 ஆலந்தூர் (சென்னை), திருப்போரூர் (செங்கல்பட்டு), YMCA நந்தனம் ARG (சென்னை), மண்டலம் 13 U39 அடையார் (சென்னை), கோடம்பாக்கம் (சென்னை), மண்டலம் 12 D156 முகலிவாக்கம் (சென்னை), சென்னை விமானநிலையம் (சென்னை), ஆலந்தூர் (சென்னை), மீனம்பாக்கம் AWS (சென்னை), இந்துஸ்தான் பல்கலைக்கழகம் ARG (காஞ்சிபுரம்), எம்ஜிஆர் நகர் (சென்னை), திருவூர் AWS (திருவள்ளூர்), ஆவடி (திருவள்ளூர்), கொத்தவாச்சேரி (கடலூர்) தலா 2, கொளப்பாக்கம் ARG (காஞ்சிபுரம்), மண்டலம்2 மீனம்பாக்கம் (சென்னை), கோடியக்கரை (மயிலாடுதுறை), வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்), செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்), பூந்தமல்லி (திருவள்ளூர்), தரங்கம்பாடி (மயிலாடுதுறை), சத்யபாமா பல்கலைக்கழகம் ARG (காஞ்சிபுரம்), NIOT_பள்ளிக்கரணை ARG (சென்னை), மரக்காணம் (விழுப்புரம்), பூந்தமல்லி ARG (திருவள்ளூர்), குன்றத்தூர் (காஞ்சிபுரம்), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), பயணியர் விடுதி சிவகங்கை (சிவகங்கை), செம்பரம்பாக்கம் ARG (காஞ்சிபுரம்), கேஆர்பி அணை (கிருஷ்ணகிரி) தலா 1." என்றார்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications