மேகம் வெடிச்சு கொட்டுற மாதிரி.. 4 மாவட்டங்களுக்கு மிக கனமழை அலர்ட்! 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Very heavy rain alert given to 4 districts in Tamilnadu

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தென்காசி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

21.11.2023: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

22.11.2023: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

23.11.2023: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, திருப்பூர், நீலகிரி மாவட்டங்கள், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

24.11.2023: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 25.11.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 - 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 - 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 - 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
நன்னிலம் (திருவாரூர்) 11, பாம்பன் (ராமநாதபுரம்) 9, தங்கச்சிமடம் (ராமநாதபுரம்) 8, களியல் (கன்னியாகுமரி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) தலா 6, சாத்தான்குளம் ARG (தூத்துக்குடி), நீடாமங்கலம் (திருவாரூர்), ராமேஸ்வரம் (ராமநாதபுரம்) தலா 5, கொடவாசல் (திருவாரூர்), சிவலோகம்(சிற்றாறு-II) (கன்னியாகுமரி), கொள்ளிடம் (மயிலாடுதுறை), மண்டபம் (ராமநாதபுரம்), பாண்டவரடி (திருவாரூர்), வாலிநோக்கம் (ராமநாதபுரம்), வம்பன் KVK AWS (புதுக்கோட்டை) தலா 4, நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்), திருக்குவளை (நாகப்பட்டினம்), காயல்பட்டினம் (தூத்துக்குடி), திருச்செந்தூர் (தூத்துக்குடி), சிற்றாறு-I (கன்னியாகுமரி), மயிலாடுதுறை (மயிலாடுதுறை), ராமநாதபுரம் (ராமநாதபுரம்), திற்பரப்பு (கன்னியாகுமரி), மணல்மேடு (மயிலாடுதுறை), திருச்செந்தூர் AWS (தூத்துக்குடி), தரங்கம்பாடி (மயிலாடுதுறை), மஞ்சளாறு (தஞ்சாவூர்), ராமநாதபுரம் KVK AWS (ராமநாதபுரம்), வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்), காரைக்கால் (காரைக்கால்), திருப்பூண்டி (நாகப்பட்டினம்), நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்), தலைஞாயிறு (நாகப்பட்டினம்), கொட்டாரம் (கன்னியாகுமரி) தலா 3, திருவிடைமருதூர் (தஞ்சாவூர்), வலங்கைமான் (திருவாரூர்), மன்னார்குடி (திருவாரூர்), கே.எம்.கோயில் (கடலூர்), கோடியக்கரை (மயிலாடுதுறை), சாத்தான்குளம் (தூத்துக்குடி), புதுக்கோட்டை (புதுக்கோட்டை), கீரனூர் (புதுக்கோட்டை), முக்கடல் அணை (கன்னியாகுமரி), மணமேல்குடி (புதுக்கோட்டை), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), திருவாரூர் (திருவாரூர்), கிளானிலை (புதுக்கோட்டை), கன்னியாகுமரி (கன்னியாகுமரி), திருப்பத்தூர் (சிவகங்கை), பரமக்குடி (ராமநாதபுரம்), மிமிசல் (புதுக்கோட்டை), கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை), தொண்டி (ராமநாதபுரம்) தலா 2, குலசேகரப்பட்டினம் (தூத்துக்குடி), திருமயம் (புதுக்கோட்டை), பரங்கிப்பேட்டை (கடலூர்), அணைகெடங்கு (கன்னியாகுமரி), ஒரத்தநாடு (தஞ்சாவூர்), மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), சேர்வலாறு அணை (திருநெல்வேலி), கும்பகோணம் (தஞ்சாவூர்), வெட்டிக்காடு (தஞ்சாவூர்), கீழ் அணைக்கட்டு (தஞ்சாவூர்), லால்பேட்டை (கடலூர்), ஆதனக்கோட்டை (புதுக்கோட்டை), கயத்தார் (தூத்துக்குடி), பெருங்களூர் (புதுக்கோட்டை), சிதம்பரம் (கடலூர்), கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), நாலுமுக்கு (திருநெல்வேலி), தக்கலை (கன்னியாகுமரி), துவாக்குடி IMTI (திருச்சிராப்பள்ளி), குழித்துறை (கன்னியாகுமரி), பாபநாசம் (திருநெல்வேலி), பாளையம்கோட்டை (திருநெல்வேலி), அடவிநயினார் அணை (தென்காசி), கடம்பூர் (தூத்துக்குடி), ஆர்.எஸ்.மங்கலம் (ராமநாதபுரம்), காக்காச்சி (திருநெல்வேலி), செம்பனார்கோயில் பொதுப்பணித்துறை (மயிலாடுதுறை) தலா 1." என்று குறிப்பிட்டு உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+