Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வார்னிங்.. மேகம் வெடிக்கிற மாதிரி! 4 மாவட்டங்களில் மிக கனமழை - 10 மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் மின கனமழை பெய்யும் என்றும் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து வெளியான அறிவிப்பில், "தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், அரியலூர், கடலூர், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருச்சிராப்பள்ளி, நீலகிரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

Very heavy rain alert in 4 districts and heavy rain alert in 10 districts

நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்பு உள்ளது.

02.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

03.09.2023 முதல் 06.09.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 - 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 - 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
திருப்புவனம் (சிவகங்கை) 14, RSCL-2 கோலியனூர் (விழுப்புரம்) 12, RSCL-2 நெமூர் (விழுப்புரம்) , RSCL-2 வளவனூர் (விழுப்புரம்) தலா 11, ஜம்புகுட்டப்பட்டி (கிருஷ்ணகிரி) 10, RSCL-2 கஞ்சனூர் (விழுப்புரம்), ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி) தலா 9, சின்னக்கல்லாறு (கோயம்புத்தூர்), விழுப்புரம் தலா 7, ஆனைப்பாளையம் (கரூர்), வானமாதேவி (கடலூர்), பெலாந்துறை (கடலூர்), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்), புதுச்சேரி, சேலம், ஆரணி (திருவண்ணாமலை) தலா 6, RSCL-3 செம்மேடு (விழுப்புரம்), சேட்பேட்டை (திருவண்ணாமலை), தென்பரநாடு (திருச்சி), கடலூர், சூரலக்கோடு (கண்னியாகுமரி), மொடக்குறிச்சி (ஈரோடு), வேப்பந்தட்டை (பெரம்பலூர்), பெனுகொண்டாபுரம் (கிருஷ்ணகிரி), வீரகனூர் (சேலம்), பாளையங்கோட்டை (திருநெல்வேலி) தலா 5, எலந்தகுட்டை மேடு (ஈரோடு), செஞ்சி (விழுப்புரம்), ஓமலூர் (சேலம்), கலசப்பாக்கம் (திருவண்ணாமலை), RSCL-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்), மாயனூர் (கரூர்), குடிதாங்கி (கடலூர்), வந்தவாசி (திருவண்ணாமலை), பாம்பார் அணை (கிருஷ்ணகிரி), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), வாடிப்பட்டி (மதுரை), BASL மணலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), BASL மணம்பூண்டி (விழுப்புரம்), கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை), திருநெல்வேலி, சாத்தூர் (விருதுநகர்), மோகனூர் (நாமக்கல்), பாரூர் (கிருஷ்ணகிரி) தலா 4, ஆட்சியர் அலுவலகம் (கடலூர்), பண்ருட்டி (கடலூர்), BASL முகையூர் (விழுப்புரம்), RSCL-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்), RSCL-2 சூரப்பட்டு (விழுப்புரம்), ஆண்டிப்பட்டி (மதுரை), ஆலங்காயம் (திருப்பத்தூர்), ஈரோடு, உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), RSCL வல்லம் (விழுப்புரம்), நெடுங்கல் (கிருஷ்ணகிரி), தம்மம்பட்டி (சேலம்), துறையூர் (திருச்சி), KRP அணை (கிருஷ்ணகிரி), வாணியம்பாடி (திருப்பத்தூர்), சந்தியூர் KVK AWS (சேலம்), KCS-1 கடவனூர் (கள்ளக்குறிச்சி), ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர்), DSCL எறையூர் (கள்ளக்குறிச்சி), மஞ்சளாறு (தஞ்சாவூர்), பெரம்பலூர் (பெரம்பலூர்) தலா 3, பாலவீதி (கரூர்), பாலக்கோடு (தருமபுரி), பொன்னேரி (திருவள்ளூர்), மதுராந்தகம் (செங்கல்பட்டு), சிதம்பரம் (கடலூர்), தூத்துக்குடி, எறையூர் (பெரம்பலூர்), திருப்பத்தூர் PTO (தழுதலை), (பெரம்பலூர்), விருதுநகர் AWS, RSCL-3 வளத்தி (விழுப்புரம்), பாலமோர் (கன்னியாகுமரி), ஹரூர் (தருமபுரி), RSCL-3 அவலூர்பேட்டை (விழுப்புரம்), கொள்ளிடம் (மயிலாடுதுறை), ஆம்பூர் (திருப்பத்தூர்), DSCL கலயநல்லூர் (கள்ளக்குறிச்சி), மங்களபுரம் (நாமக்கல்), DSCL தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி), DSCL ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி), பல்லடம் (திருப்பூர்), அரியலூர் முகாம் பகுதி (திருப்பூர்), கரியகோவில் அணை (சேலம்), கிருஷ்ணாபுரம் (பெரம்பலூர்), கோடநாடு (நீலகிரி), RSCL-2 கேதர் (விழுப்புரம்), எமரலாடு (நீலகிரி), குமாரபாளையம் (நாமக்கல்), புகையிலை நிலையம் (திண்டுக்கல்) தலா 2, வேடசந்தூர் (திண்டுக்கல்), ஆயின்குடி (புதுக்கோட்டை), திருச்சுழி (விருதுநகர்), மணிமுத்தாறு அணை பொதுப்பணித்துறை (கள்ளக்குறிச்சி), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), சின்கோனா (கோயம்புத்தூர்), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), மைலம்பட்டி (கரூர்), அரவக்குறிச்சி (கரூர்), கொடுமுடி (ஈரோடு), பஞ்சபட்டி (கரூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), சாந்தி விஜயா பள்ளி (நீலகிரி), கமுதி (ராமநாதபுரம்), ஆரல்வாய்மொழி (கன்னியாகுமரி), கரூர், கொடுமுடியாறு அணை (திருநெல்வேலி), பாப்பிரெட்டிப்பட்டி (தருமபுரி), குடியாத்தம் (வேலூர்), கிருஷ்ணராயபுரம் (கரூர்), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), கோமுகி பொதுப்பணித்துறை (கள்ளக்குறிச்சி), தாராபுரம் (திருப்பூர்), பரமத்திவேலூர் (நாமக்கல்), திருவண்ணாமலை, நாகர்கோவில் (கன்னியாகுமரி), ஏழுமலை (மதுரை), நன்னிலம் (திருவாரூர்), வானூர் (விழுப்புரம்), திண்டிவனம் (விழுப்புரம்), அருப்புக்கோட்டை (விருதுநகர்), மயிலாடி (கன்னியாகுமரி), பெரம்பூர் (சென்னை), பூதப்பாண்டி (கன்னியாகுமரி), மேலாளத்தூர் (வேலூர்), கடவூர் (கரூர்), குண்டேரிப்பள்ளம் ஈரோடு), குப்பணம்பட்டி (மதுரை), முக்கடல் அணை (கன்னியாகுமரி), பூண்டி (திருவள்ளூர்), கரூர் பரமத்தி, செங்கம் (திருவண்ணாமலை), போளூர் (திருவண்ணாமலை), அருப்புக்கோட்டை KVK AWS (விருதுநகர்), KCS மில்-2 கச்சிராயப்பாளையம் (கள்ளக்குறிச்சி), வி.களத்தூர் (பெரம்பலூர்), கோவிலங்குளம் (விருதுநகர்), கல்லிக்குடி (மதுரை), கிருஷ்ணகிரி, தாளவாடி (ஈரோடு), குந்தா பாலம் (நீலகிரி), செய்யூர் (செங்கல்பட்டு), கள்ளக்குறிச்சி, வால்பாறை PTO (கோயம்புத்தூர்) தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப்பகுதிகளில் 03.09.2023 மற்றும் 04.09.2023: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகளில் நாளை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 02.09.2023: தெற்கு இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

03.09.2023: இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

04.09.2023: இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+