Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வானமே அதிரப்போகுது.. 2 மாவட்டங்களில் மிக கனமழை! 8 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட் - அப்போ சென்னை?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 2 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

இதுகுறித்து வெளியான அறிவிப்பில், "வடதமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

Very heavy rain fall alert for 2 districts and heavy rain alert for 8 districts

06.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

07.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

08.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

09.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

10.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

11.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸாக இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-23 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸாக இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): வால்பாறை PAP (கோயம்புத்தூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) தலா 13, வீரபாண்டி (தேனி), தொண்டி (ராமநாதபுரம்) தலா 11, போடிநாயக்கனூர் (தேனி), செங்கோட்டை (தென்காசி), திருப்பூர் PWD தலா 10, தம்மம்பட்டி (சேலம்), எலந்தகுட்டை மேடு (ஈரோடு), ராமநாதபுரம், எடப்பாடி (சேலம்), குமாரபாளையம் (நாமக்கல்) தலா 9, வால்பாறை PTO (கோயம்புத்தூர்), ஆண்டிபட்டி (மதுரை), வாலிநோக்கம் (ராமநாதபுரம்), மோகனூர் (நாமக்கல்), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்) தலா 8, பவானி (ஈரோடு), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), புலிப்பட்டி (மதுரை), மொடக்குறிச்சி (ஈரோடு), பில்லூர் அணை மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), குண்டேரிப்பள்ளம் (ஈரோடு), ஆம்பூர் (திருப்பத்தூர்), சங்கரி துர்க்கம் (சேலம்), கீழ்கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி), ஆர்.எஸ்.மங்கலம் (ராமநாதபுரம்), பாம்பார் அணை (கிருஷ்ணகிரி) தலா 7, ராமநாடு KVK AWS, சின்கோனா (கோயம்புத்தூர்), காட்பாடி (வேலூர்), கெத்தை (நீலகிரி), கோபிசெட்டிபாளையம் (ஈரோடு), நம்பியூர் (ஈரோடு), எருமைப்பட்டி (நாமக்கல்), பரமத்திவேலூர் (நாமக்கல்), சுருளகோடு (கன்னியாகுமரி), குந்தா பாலம் (நீலகிரி), சோலையார் (கோயம்புத்தூர்), இளையங்குடி (சிவகங்கை), கோடிவேரி (ஈரோடு), சிட்டம்பட்டி (மதுரை) தலா 6, வரட்டுப்பள்ளம் (ஈரோடு), மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), தீர்த்தாண்டதானம் (ராமநாதபுரம்), ஊத்துக்குளி (திருப்பூர்), சத்தியமங்கலம் (ஈரோடு), பர்லியார் (நீலகிரி), குன்னூர் (நீலகிரி), சாந்தி விஜயா பள்ளி (நீலகிரி), ஊத்து (திருநெல்வேலி), சோத்துப்பாறை (தேனி), பொன்னேரி (திருவள்ளூர்), கங்கவல்லி (சேலம்), வெம்பக்கோட்டை (விருதுநகர்), குண்டாறு அணை (தென்காசி), சிறுகுடி (திருச்சிராப்பள்ளி), கிருஷ்ணராயபுரம் (கரூர்), பெருந்துறை (ஈரோடு), ஆழியார் (கோயம்புத்தூர்), விரிஞ்சிபுரம் AWS (வேலூர்), பவானிசாகர் (ஈரோடு), வட்டானம் (ராமநாதபுரம்), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), அழகரை எஸ்டேட் (நீலகிரி), பாரூர் (கிருஷ்ணகிரி), ஆத்தூர் (சேலம்), மடத்துக்குளம் (திருப்பூர்), வானூர் (விழுப்புரம்) தலா 5, பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்), ஈரோடு, CD மருத்துவமனை தண்டையார்பேட்டை (சென்னை), சேர்வலாறு அணை (திருநெல்வேலி), திருப்பூர் தெற்கு, மாயனூர் (கரூர்), தழுதலை (பெரம்பலூர்), RSCL-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்), மேலாலத்தூர் (வேலூர்), ஏற்காடு (சேலம்), ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி), சோழவந்தான் (மதுரை), சேலம், கொடுமுடி (ஈரோடு), நாலுமுக்கு (திருநெல்வேலி), வேலூர், மதுக்கூர் (தஞ்சாவூர்), திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகம், RSCL-2 கஞ்சனூர் (விழுப்புரம்), மானாமதுரை (சிவகங்கை), கோவிலங்குளம் (விருதுநகர்), சேந்தமங்கலம் (நாமக்கல்), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்), மிமிசல் (புதுக்கோட்டை), கொடைக்கானல் (திண்டுக்கல்), அருப்புக்கோட்டை KVK AWS (விருதுநகர்), எழுமலை (மதுரை), புள்ளம்பாடி (திருச்சிராப்பள்ளி), நடுவட்டம் (நீலகிரி), பொதுப்பணித்துறை மக்கினம்பட்டி (கோயம்புத்தூர்), ராமேஸ்வரம் (ராமநாதபுரம்), கரூர், அரண்மனைப்புதூர் (தேனி), மேல் பவானி (நீலகிரி), நன்னிலம் (திருவாரூர்), அம்மாபேட்டை (ஈரோடு), தென்பரநாடு (திருச்சிராப்பள்ளி), ஆனைமடுவு அணை (சேலம்), மேட்டுப்பட்டி (மதுரை) தலா 4, காக்காச்சி (திருநெல்வேலி), ஆதார் எஸ்டேட் (நீலகிரி), வேதநாதம் (தூத்துக்குடி), மங்களபுரம் (நாமக்கல்), RSCL-2 நேமூர் (விழுப்புரம்), பாபநாசம் (திருநெல்வேலி), கவுந்தப்பாடி (ஈரோடு), குண்டடம் (திருப்பூர்), சிறுவாணி அடிவாரம் (கோயம்புத்தூர்), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி), கின்னக்கோரை (நீலகிரி), ஜம்புகுட்டப்பட்டி (கிருஷ்ணகிரி), கல்லிக்குடி (மதுரை), கல்லணை (தஞ்சாவூர்), கேத்தி (நீலகிரி), பாலக்கோடு (தர்மபுரி), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), ஒகேனக்கல் (தர்மபுரி), தல்லாகுளம் (மதுரை), புத்தன் அணை (கன்னியாகுமரி), தேவாலா (நீலகிரி), அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை), குடியாத்தம் (வேலூர்), பெனுகொண்டபுரம் (கிருஷ்ணகிரி), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), சூரங்குடி (தூத்துக்குடி), நிலக்கோட்டை (சென்னை), வைப்பாறு (தூத்துக்குடி), சாத்தியார் (மதுரை), SRC குடிதாங்கி (கடலூர்), ஆட்சியர் அலுவலகம் திருப்பூர், KCS மில்-1 மூங்கில்துறைப்பட்டு (கள்ளக்குறிச்சி), செருமுள்ளி (நீலகிரி), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), அரூர் (தர்மபுரி), பெரியபட்டி (மதுரை), நாகுடி (புதுக்கோட்டை), கூடலூர் பஜார் (நீலகிரி), தொண்டாமுத்தூர் (கோயம்புத்தூர்), எட்டயபுரம் (தூத்துக்குடி), மணமேல்குடி (புதுக்கோட்டை), திருப்புவனம் (சிவகங்கை), மஞ்சளாறு (தேனி), வி.களத்தூர் (பெரம்பலூர்), உப்பாறு அணை (திருப்பூர்), கோத்தகிரி (நீலகிரி), தலைவாசல் (சேலம்), உத்தமபாளையம் (தேனி), பெரம்பூர் (சென்னை), வேப்பந்தட்டை (பெரம்பலூர்), ராஜபாளையம் (விருதுநகர்), அரிமளம் (புதுக்கோட்டை), அம்முண்டி (வேலூர்), செய்யூர் (செங்கல்பட்டு), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), ஆயிக்குடி (தென்காசி), மாஞ்சோலை (திருநெல்வேலி), வீரகனூர் (சேலம்) தலா 3, கல்லக்குடி (திருச்சிராப்பள்ளி), தாளவாடி (ஈரோடு), கோடநாடு (நீலகிரி), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), DSCL தியாகதுர்க்கம் (கள்ளக்குறிச்சி), அவினாசி (திருப்பூர்), மேல் கூடலூர் (நீலகிரி), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), கிளன்மார்கன் (நீலகிரி), உதகமண்டலம் (நீலகிரி), செங்கம் (திருவண்ணாமலை), சந்தியூர் KVK AWS (சேலம்), நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்), மதுராந்தகம் தாலுகா அலுவலகம் (செங்கல்பட்டு), அவலாஞ்சி (நீலகிரி), வாணியம்பாடி (திருப்பத்தூர்), பார்வூட் (நீலகிரி), திருமானூர் (அரியலூர்), ஆவுடையார்கோயில் (புதுக்கோட்டை), சென்னை ஆட்சியர் அலுவலகம், அடையாமடை (கன்னியாகுமரி), கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), சிவலோகம்(சிற்றாறு-II) (கன்னியாகுமரி), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்), செட்டிகுளம் (பெரம்பலூர்), BASL முகையூர் (விழுப்புரம்), சோழிங்கநல்லூர் (சென்னை), கரியகோவில் அணை (சேலம்), பாலமோர் (கன்னியாகுமரி), மதுரை வடக்கு, அன்னூர் (கோயம்புத்தூர்), மதுரை நகரம், தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை), விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி), வாடிப்பட்டி (மதுரை), RSCL-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்), கருப்பாநதி அணை (தென்காசி), முதுகுளத்தூர் (ராமநாதபுரம்), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), கோயம்புத்தூர் விமான நிலையம், பாடலூர் (பெரம்பலூர்), ஒரத்தநாடு (தஞ்சாவூர்), மணல்மேடு (மயிலாடுதுறை), ஆயின்குடி (புதுக்கோட்டை), அம்பத்தூர் (சென்னை), பரமக்குடி (ராமநாதபுரம்), திருமங்கலம் (மதுரை), சமயபுரம் (திருச்சிராப்பள்ளி), திண்டிவனம் (விழுப்புரம்), ஆனைமலை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), குலசேகரப்பட்டினம் (தூத்துக்குடி), கரம்பக்குடி (புதுக்கோட்டை), சிற்றாறு-I (கன்னியாகுமரி), ஓமலூர் (சேலம்), திருச்சுழி (விருதுநகர்), எமரால்டு (நீலகிரி), நெடுங்கல் (கிருஷ்ணகிரி), சூலூர் (கோயம்புத்தூர்), TNAU கோயம்புத்தூர், மன்னார்குடி (திருவாரூர்), ராசிபுரம் (நாமக்கல்), வம்பன் KVK AWS (புதுக்கோட்டை), புது வேட்டக்குடி (பெரம்பலூர்), ஒட்டன்சத்திரம் (தர்மபுரி), ராணிப்பேட்டை (ராணிப்பேட்டை), அமராவதி அணை (திருப்பூர்), ராயபுரம் (சென்னை), தேவிமங்கலம் (திருச்சிராப்பள்ளி), உடுமலைப்பேட்டை (திருப்பூர்), அரவக்குறிச்சி (கரூர்), TCS மில் கேதாண்டபட்டி (திருப்பத்தூர்), கடலாடி (ராமநாதபுரம்), புதுக்கோட்டை, ஆண்டிபட்டி (தேனி), டேனிஷ்பேட்டை (சேலம்) தலா 2, பையூர் AWS (கிருஷ்ணகிரி), ராமநதி அணைப்பகுதி (தென்காசி), திருச்செங்கோடு (நாமக்கல்), மயிலம்பட்டி (கரூர்), அறந்தாங்கி (புதுக்கோட்டை), பெரம்பலூர், கீழச்செருவை (கடலூர்), வாலாஜா (ராணிப்பேட்டை), மண்டலம் 01 கத்திவாக்கம் (சென்னை), புதுச்சத்திரம் (நாமக்கல்), பஞ்சப்பட்டி (கரூர்), சண்முகாநதி (தேனி), பேராவூரணி (தஞ்சாவூர்), துவாக்குடி (திருச்சிராப்பள்ளி), சிங்கம்புணரி (சிவகங்கை), கோயம்புத்தூர்-தெற்கு, கிளானிலை (புதுக்கோட்டை), புதுச்சேரி, குப்பணம்பட்டி (மதுரை), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), அரியலூர் முகாம் பகுதி (கள்ளக்குறிச்சி), அம்மூர் (வாலாஜா இரயில்வே) (ராணிப்பேட்டை), RSCL-2 சூரப்பட்டு (விழுப்புரம்), கல்லந்திரி (மதுரை), செம்பனார்கோயில் பொதுப்பணித்துறை (மயிலாடுதுறை), டிஜிபி அலுவலகம் (சென்னை), தாலுகா அலுவலகம் திருப்பத்தூர், பாப்பாரப்பட்டி KVK AWS (தர்மபுரி), பாலவிடுதி (கரூர்), பாண்டவரடி (திருவாரூர்), காமாட்சிபுரம் (திண்டுக்கல்), மயிலாடுதுறை, திருச்சிராப்பள்ளி விமானநிலையம் சென்னிமலை (ஈரோடு), கிருஷ்ணபுரம் (பெரம்பலூர்), BASL மணம்பூண்டி (விழுப்புரம்), தோகமலை (கரூர்), KCS மில்-2 கச்சிராயபாளையம் (கள்ளக்குறிச்சி), சூலகிரி (கிருஷ்ணகிரி), பெரியாறு (தேனி), பள்ளமோர்குளம் (ராமநாதபுரம்), அருப்புக்கோட்டை (விருதுநகர்), திருவண்ணாமலை, விழுப்புரம், செங்குன்றம் (திருவள்ளூர்), ஆனைப்பாளையம் (கன்னியாகுமரி), பல்லடம் (திருப்பூர்), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), மாரண்டஹள்ளி (தர்மபுரி), கன்னியாகுமரி, மண்டலம் 02 D15 மணலி (சென்னை), நீடாமங்கலம் (திருவாரூர்), RSCL-2 கெடார் (விழுப்புரம்), எறையூர் (பெரம்பலூர்), KCS மில்-1 அரியலூர் (கள்ளக்குறிச்சி), போளூர் (திருவண்ணாமலை), மண்டலம் 01 திருவொற்றியூர் (சென்னை), லால்குடி (திருச்சிராப்பள்ளி), கொடவாசல் (திருவாரூர்), எச்சன்விடுதி (தஞ்சாவூர்), கும்பகோணம் (தஞ்சாவூர்), தேவகோட்டை (சிவகங்கை), பாலாறு அணைக்கட்டு (ராணிப்பேட்டை), திருவாடானை (ராமநாதபுரம்), மண்டலம் 02 மணலி (சென்னை), பெரியாறு அணை (விருதுநகர்), களியல் (கன்னியாகுமரி), கோவில்பட்டி (தூத்துக்குடி), விளாத்திகுளம் (தூத்துக்குடி), பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை (தர்மபுரி), தர்மபுரி, கொப்பம்பட்டி (திருச்சிராப்பள்ளி), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), புகையிலை நிலையம் (VDR) (திண்டுக்கல்), முக்கடல் அணை (கன்னியாகுமரி), க.பரமத்தி (கரூர்), வேடசந்தூர் (திண்டுக்கல்), தஞ்சை பாபநாசம் (தஞ்சாவூர்), பெருங்களூர் (புதுக்கோட்டை), திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு), காங்கேயம் (திருப்பூர்), மண்டலம் 04 தண்டையார்பேட்டை (சென்னை), திருமயம் (புதுக்கோட்டை), செஞ்சி (விழுப்புரம்), மலையூர் (புதுக்கோட்டை), ஓசூர் (கிருஷ்ணகிரி), ஆற்காடு (ராணிப்பேட்டை), முசிறி (திருச்சிராப்பள்ளி), தங்கச்சிமடம் (ராமநாதபுரம்), ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்), கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை), சின்னார் அணை (கிருஷ்ணகிரி), கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை), கொரட்டூர் (திருவள்ளூர்), நத்தம் (திண்டுக்கல்), மண்டலம்4 U41 பெருங்குடி (சென்னை), இடையப்பட்டி (மதுரை), வலங்கைமான் (திருவாரூர்), மேட்டூர் (சேலம்), கடனா அணை (தென்காசி), மரக்காணம் (விழுப்புரம்), KCS மில்-1 கடவனூர் (கள்ளக்குறிச்சி), வைகை அணை (தேனி), துறையூர் (திருச்சிராப்பள்ளி), உசிலம்பட்டி (மதுரை), ஆலங்குடி (புதுக்கோட்டை), பொன்மலை (திருச்சிராப்பள்ளி), மண்டலம்5 உத்தண்டி (சென்னை), திருச்சிராப்பள்ளி சந்திப்பு, வனமாதேவி (கடலூர்) தலா 1." என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+