மேகம் வெடிப்பதை போல்.. சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை வாய்ப்பு! ஆரஞ்சு அலர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

இதுகுறித்து வெளியான அறிவிப்பில், "இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யவாய்ப்புள்ளது. வேலூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

 Very heavy rain fall alert of 5 districts including Chennai today

05.12.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

06.12.2023 மற்றும் 07.12.2023: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

08.12.2023 முதல் 10.12.2023 வரை: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் அநேக பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.

மண்டலம் 14 பெருங்குடி (சென்னை) 29, ஆவடி (திருவள்ளூர்) 28, ஆலந்தூர் (சென்னை), சென்னை விமானநிலையம் (சென்னை) தலா 25, மண்டலம் 13 அடையார் (சென்னை), மீனம்பாக்கம் AWS (சென்னை), மண்டலம் 12 மீனம்பாக்கம் (சென்னை), சென்னை நுங்கம்பாக்கம் (சென்னை), புழல் ARG (திருவள்ளூர்), சோழவரம் (திருவள்ளூர்) தலா 23, மகாபலிபுரம் (செங்கல்பட்டு), எம்ஜிஆர் நகர் (சென்னை), மண்டலம் 10 கோடம்பாக்கம் (சென்னை), CD மருத்துவமனை தண்டையார்பேட்டை (சென்னை) தலா 22, மண்டலம் 11 வளசரவாக்கம் (சென்னை), மண்டலம் 15 சோழிங்கநல்லூர் (சென்னை), டிஜிபி அலுவலகம் (சென்னை), NIOT_பள்ளிக்கரணை ARG (சென்னை), சென்னை (N) AWS (சென்னை), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), பொன்னேரி (திருவள்ளூர்) தலா 21, மண்டலம் 03 புழல் (சென்னை), பெரம்பூர் (சென்னை), மண்டலம் 09 ஐஸ் ஹவுஸ் (சென்னை), செங்குன்றம் (திருவள்ளூர்) தலா 20, அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை), தரமணி ARG (சென்னை), சத்யபாமா பல்கலைக்கழகம் ARG (காஞ்சிபுரம்), அண்ணா நகர் (சென்னை), VIT சென்னை AWS (செங்கல்பட்டு) தலா 19, சென்னை ஆட்சியர் அலுவலகம் (சென்னை), சோழிங்கநல்லூர் (சென்னை), மண்டலம் 09 தேனாம்பேட்டை (சென்னை), மண்டலம் 08 மலர் காலனி (சென்னை), அம்பத்தூர் (சென்னை), அண்ணா பல்கலைக்கழகம் ARG (சென்னை), வளசரவாக்கம் (சென்னை), வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்), YMCA நந்தனம் ARG (சென்னை), காட்டுப்பாக்கம் KVK AWS (காஞ்சிபுரம்), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), கோடம்பாக்கம் (சென்னை) தலா 18, கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), தாம்பரம் (செங்கல்பட்டு), அம்பத்தூர் (சென்னை), கேளம்பாக்கம் (செங்கல்பட்டு) தலா 17, மண்டலம் 06 திரு.வி.க.நகர் (சென்னை), மண்டலம் 04 தண்டையார்பேட்டை (சென்னை), செம்பரம்பாக்கம்-வருவாய்த்துறை (காஞ்சிபுரம்), தேனாம்பேட்டை (சென்னை), திருவள்ளூர் (திருவள்ளூர்), மண்டலம் 01 கத்திவாக்கம் (சென்னை), திரு.வி.க நகர் (சென்னை), மண்டலம் 03 மாதவரம் (சென்னை) தலா 16, ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), மண்டலம் 08 அண்ணாநகர் (சென்னை), சோழிங்கநல்லூர் (சென்னை), திருவூர் AWS (திருவள்ளூர்), மண்டலம் 06 D65 கொளத்தூர் (சென்னை), தண்டையார்பேட்டை (சென்னை), மண்டலம் 14 U41 பெருங்குடி (சென்னை), எண்ணூர் AWS (சென்னை) தலா 15, மண்டலம் 07 அம்பத்தூர் (சென்னை), மண்டலம் 13 அடையார் சுற்றுச்சூழல் பூங்கா (சென்னை), மண்டலம் 05 GCC (சென்னை), பூந்தமல்லி (திருவள்ளூர்), திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு), மண்டலம் 12 ஆலந்தூர் (சென்னை), கொரட்டூர் (திருவள்ளூர்) தலா 14, ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), திருப்போரூர் (செங்கல்பட்டு), மண்டலம் 02 மணலி (சென்னை), மண்டலம் U39 அடையார் (சென்னை), செம்பரம்பாக்கம்-CMWSSB (காஞ்சிபுரம்) தலா 13, மண்டலம் D156 முகலிவாக்கம் (சென்னை), குன்றத்தூர் (காஞ்சிபுரம்), செங்கல்பட்டு (செங்கல்பட்டு), மண்டலம் 15 உத்தண்டி (சென்னை), ராயபுரம் (சென்னை), மண்டலம் 07 U18 D81 வானகரம் (சென்னை) தலா 12, மண்டலம் 05 ராயபுரம் (சென்னை), மண்டலம் U32 மதுரவாயல் (சென்னை) தலா 11,பூண்டி (திருவள்ளூர்), திருத்தணி (திருவள்ளூர்) தலா 10, திருவொற்றியூர் (சென்னை), மதுராந்தகம் தாலுகா அலுவலகம் (செங்கல்பட்டு), திருவாலங்காடு (திருவள்ளூர்), காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), செய்யூர் (செங்கல்பட்டு) தலா 9, வாலாஜாபாத் (காஞ்சிபுரம்), மின்னல் (ராணிப்பேட்டை), அரக்கோணம் (ராணிப்பேட்டை), மரக்காணம் (விழுப்புரம்) தலா 8, மண்டலம் 01 திருவொற்றியூர் (சென்னை) 7, திருத்தணி PTO (திருவள்ளூர்) 6, மண்டலம் 02 D15 மணலி (சென்னை), சோளிங்கர் (ராணிப்பேட்டை), காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை), வெம்பாக்கம் (திருவண்ணாமலை), பனப்பாக்கம் (ராணிப்பேட்டை) தலா 5, பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), ஆர்.கே.பேட்டை (திருவள்ளூர்), பெருங்குடி (சென்னை), பூண்டி (திருவள்ளூர்), அடவிநயினார் அணை (தென்காசி), வந்தவாசி (திருவண்ணாமலை), ஆலந்தூர் (செங்கல்பட்டு) தலா 4, வானூர் (விழுப்புரம்), புதுச்சேரி (புதுச்சேரி), கலவை பொதுப்பணித்துறை (ராணிப்பேட்டை) தலா 3, ஆற்காடு (ராணிப்பேட்டை), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்), செய்யார் (திருவண்ணாமலை), திண்டிவனம் (விழுப்புரம்), புதுச்சேரி AWS (புதுச்சேரி), வாலாஜா (ராணிப்பேட்டை), பாலாறு அணைக்கட்டு (ராணிப்பேட்டை), கோவில்பட்டி (தூத்துக்குடி), RSCL வல்லம் (விழுப்புரம்), காட்பாடி (வேலூர்), அம்மூர் (வாலாஜா இரயில்வே) (ராணிப்பேட்டை), பொன்னை அணை (வேலூர்), ஆரணி (திருவண்ணாமலை), அம்முண்டி (வேலூர்) தலா 2, கடலூர் (கடலூர்), கடலூர் ஆட்சியர் அலுவலகம் (கடலூர்), உசிலம்பட்டி (மதுரை), RSCL-3 வளத்தி (விழுப்புரம்), அரண்மனைப்புதூர் (தேனி), சேத்துப்பட்டு (திருவண்ணாமலை), வேலூர் (வேலூர்), குடியாத்தம் (வேலூர்), மாஞ்சோலை (திருநெல்வேலி), தென்பரநாடு (திருச்சிராப்பள்ளி), மேலாலத்தூர் (வேலூர்), ஆம்பூர் (திருப்பத்தூர்), RSCL-3 அவலூர்பேட்டை (விழுப்புரம்), கலசப்பாக்கம் (திருவண்ணாமலை), RSCL-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்), டேனிஷ்பேட்டை (சேலம்), ஆலங்காயம் (திருப்பத்தூர்), போளூர் (திருவண்ணாமலை), RSCL-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்), எட்டயபுரம் (தூத்துக்குடி), தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), செங்கம் (திருவண்ணாமலை), BASL முகையூர் (விழுப்புரம்), SRC குடிதாங்கி (கடலூர்), தர்மபுரி PTO (தர்மபுரி), கொத்தவாச்சேரி (கடலூர்), விரிஞ்சிபுரம் AWS (வேலூர்), RSCL-3 செம்மேடு (விழுப்புரம்), நாலுமுக்கு (திருநெல்வேலி), ராணிப்பேட்டை (ராணிப்பேட்டை) தலா 1." என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+