நெல்லையை மீண்டும் புரட்டிப்போட்ட அதி கனமழை..24 மணி நேரத்தில் 220 மில்லி மீட்டராம்! இன்றும் தொடருமாம்
சென்னை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் நெல்லை ஊத்து பகுதியில் 220 மில்லி மீட்டர் அதிகனமழை பதிவாகி இருக்கிறது.
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நேற்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.

இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிபட்சமாக நெல்லை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்து உள்ள ஊத்து பகுதியில் 220 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. நெல்லை நாலுமுக்கு பகுதியில் 210 மில்லி மீட்டர் மழையில், காக்காச்சி மலைப் பகுதியில் 200 மில்லி மீட்டர் மழையும், மாஞ்சோலையில் 102 மில்லி மீட்டர் மழையில் கொட்டித் தீர்த்து இருக்கிறது.
இதேபோல் நேற்றும் காக்காச்சி (திருநெல்வேலி), ஊத்து (திருநெல்வேலி) தலா 16, நாலுமுக்கு (திருநெல்வேலி) 15, மாஞ்சோலை (திருநெல்வேலி) 6, பாபநாசம் (திருநெல்வேலி), கொள்ளிடம் (மயிலாடுதுறை) தலா 2, தரங்கம்பாடி (மயிலாடுதுறை), சிதம்பரம் (கடலூர்), கொடவாசல் (திருவாரூர்), அண்ணாமலை நகர் (கடலூர்), சேர்வலாறு அணை (திருநெல்வேலி), பரங்கிப்பேட்டை (கடலூர்), நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்), வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்), சீர்காழி (மயிலாடுதுறை), மயிலாடுதுறை (மயிலாடுதுறை), திருக்குவளை (நாகப்பட்டினம்) தலா 1. மழை கொட்டித்தீர்த்தது.
"இன்றும் நாளையும், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 1.01.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
02.01.2024: தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
03.01.2024: தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 04.01.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்." என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications