நடிகர் விஜய் ஃபுல் ஃபோர்சில் குதிச்சுட்டாரே.. சென்னையில் மருத்துவ முகாம்கள்! எங்கெங்கு தெரியுமா?
சென்னை: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்காக விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் 6 இடங்களை வெளியிட்டு உள்ளார் அதன் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள பதிவில், "தளபதி விஜய் அவர்களின் சொல்லுக்கிணங்க, கைகோர்ப்போம் துயர்துடைப்போம்.! தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக, மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மக்களின் நலனை காக்கவும், காய்ச்சல் உள்ளிட்ட மழைக்கால நோய்களை தடுக்கும் நோக்கிலும் வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை-க்கு உட்பட்ட பகுதிகளில் 25 இடங்களில் டிசம்பர் 14-ம் தேதி அன்று காலை 8.05 மணி முதல் மதியம் 1.00 மணி வரை சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது." என்று குறிப்பிட்டு பின்வரும் அறிக்கையை வெளியிட்டு உள்ளார்.

அதில், "தளபதி அவர்களின் சொல்லுக்கிணங்க சென்னை மக்களுக்கு மருத்துவ முகாம்கள். மிக்ஜாம் புயல் மழை காரணமாக பாதிக்கப்பட்ட சென்னை மக்களின் நலனை பாதுகாக்கும் வகையிலும், காய்ச்சல் உள்ளிட்ட மழைக்கால நோய்களை தடுக்கும் நோக்கிலும் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள் வருகின்ற 14.12.2023 அன்று காலை 8.05 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெற உள்ளது.
வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை ஆகிய பகுதிகளில் 25 இடங்களில் பல்துறை மருத்துவர்கள், செவிலியர்கள் பங்கேற்க உள்ள இம்மருத்துவ முகாம்கள் வழியாக குழந்தைகள், பெண்கள், முதியோர்களுக்கு நோய் தடுப்பு மருந்துகள், மாத்திரைகள் மற்றும் உரிய ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன. பொதுமக்களின் நலன் காக்கும் இம்மருத்துவ முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள்:
வடசென்னை மாவட்டம்:
1. வார்டு - 46
முகவரி: முல்லை நகர், அசோக் பில்லர், அரசு உயர் நிலை பள்ளி அருகில் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி
2. வார்டு - 45
முகவரி: P.B.ரோடு, கரிமேடு, வியாசார்பாடி, தீயனைப்பு நிலையம் அருகில் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி
3. வார்டு - 35
முகவரி: கொடுங்கையூர், முத்தமிழ் நகர், பள்ளிவாசல்அருகில். பெரம்பூர் சட்டமன்ற தொகுதி

4. வார்டு - 72
முகவரி: 9, கஸ்தூரிபாய் காலனி A பிளாக், கண்ணிகாபுரம், மக்கள் மறுமலர்ச்சி மன்றம் அருகில் திரு.வி.க.நகர் சட்டமன்ற தொகுதி
5. வார்டு - 75
முகவரி: சுப்புராயம் 4-வது தெரு, திரு.வி.க.நகர் தொகுதி
6. வார்டு - 65
முகவரி: முத்துமாரியம்மன் கோவில் தெரு MGR நகர் SBI அருகில் கொளத்தூர் தொகுதி." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications