கதிகலங்க வைக்கும் சென்னை, வேளச்சேரி வெள்ளம்.. நெஞ்சை உலுக்கும் வீடியோ தொகுப்பு இதோ!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக தத்தளிக்கிறது சென்னை. சமீபகால வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு தொடர்ந்து மழை பெய்கிறது. 2015ம் ஆண்டின் பெருவெள்ள பாதிப்பை கண்முன்னே காட்டுகிறது. அப்போது ஒரு மணி நேர இடைவெளியில் ஒரேயடியாக 50 செ.மீ மழை பெய்தது பெரு வெள்ளத்திற்கு காரணம். செம்பரம்பாக்கம் ஏரியை திட்டமிடாமல் திறந்து விட்டு வெந்த புண்ணில் வேலை பாய்ச்சிவிட்டார்கள் அப்போதைய ஆட்சியாளர்கள் என்ற குற்றச்சாட்டும் உண்டு. அது ஒருபக்கம் இருக்கட்டும். இப்போது பெய்யும் மழை தொடர்ச்சியாக ஆனால் பெரிய அளவில் பெய்தபடியே இருப்பதுதான் பிரச்சினையின் வீரியத்தை கூட்டுகிறது.

Watch Chennai Velachery Flood related Videos during cyclone michaung nears

சென்னையில் "இந்தமுறையும்" அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது வேளச்சேரி ஏரியாதான். வேளச்சேரியா அல்லது வெள்ளச்சேரியா என்று கேட்கும் நிலை உள்ளது. கார்களை கடல் அலைபோல மழை வெள்ளம் தூக்கிச் சென்ற வீடியோ, திடீரென ஒரு பெட்ரோல் பங்க் பள்ளத்தில் விழுந்த வீடியோ என்று இன்றைய தினம், உங்களை உலுக்கிய காட்சிகள் அனைத்துமே வேளச்சேரியை சுற்றி நடந்தவைதான்.

Watch Chennai Velachery Flood related Videos during cyclone michaung nears

இதோ சென்னையை அதிலும் குறிப்பாக வேளச்சேரியை உலுக்கிய சம்பவங்களின் வீடியோ தொகுப்பு உங்களுக்காக. இதை பார்த்தால் பாதிப்பின் அளவை உடனே புரிந்துகொள்ள முடியும்.

காரே மிதக்குது:

இந்த ட்விட்டர் கணக்கில் ஷேர் செய்யப்பட்டுள்ள வீடியோ வேளச்சேரி பள்ளிக்கரணை பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு வளாகம் அருகே கார்கள் ஏதோ படகுகளை போல அடித்துச் செல்லப்பட்டு ஒன்றுக்கொன்று மோதிக்கொள்ளும் காட்சியை பார்த்தால் அச்சம் மேலோங்குவது நிச்சயம்.

நாராயணபுரம் ஏரி:

வேளச்சேரி அருகேயுள்ள நாராயணபுரம் ஏரிக் கரை உடைந்து தண்ணீர் பாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இருப்பினும் மாநகராட்சி ஊழியர்கள் விரைந்து வந்து நிலைமையை சீர் செய்தனர்.

பெரிய பள்ளம்:

வேளச்சேரியில் இருந்த பெட்ரோல் பங்க்கில் திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டதால் 40 அடிக்கு உள்ளே போய்விட்டது. ஊழியர்களும் சேர்ந்தே திடீரென பாதாளத்திற்கு போனதால் பதற்றமான சூழல் நிலவியது. நல்லவேளையாக மாநகராட்சி ஊழியர்கள் உதவியோடு ஊழியர்கள் மீட்கப்பட்டனர்.

கடலாக மாறிய சென்னை:

வீட்டுக்கு பக்கத்தில் திடீரென்று கடல் வந்துவிட்டால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு அனுபவம் வேளச்சேரி மக்களுக்கு இன்று கிடைத்தது. இதை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

வாரி சுருட்டிய பூமி:

சென்னை போயஸ் கார்டன் பகுதியில் அருகில் நின்று கொண்டிருந்த மின் கம்பத்தை அப்படியே வாரி சுருட்டுகிறது, பூமி பள்ளம் என்று சுற்றலில் விடப்பட்டுள்ள இந்த வீடியோ பயமுறுத்துவதாக அமைத்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+