வங்கக்கடலில் ஆட்டம்தான்! அடுத்த 3 மணி நேரம் ரொம்ப முக்கியம்.. மழை விளாச போகுது.. சென்னைக்கு வார்னிங்
சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு முழுக்க சென்னையில் கனமழை பெய்து வந்தது.
சென்னையில் பல பகுதிகளில் 5 செமீ வரை மழை பதிவானது. அதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பொன்னேரியில் 8 செமீ மழை கொட்டியது. செங்குன்றம், ஆவடியில் தலா 7 செமீ, சோழவரம், தாமரைப்பாக்கத்தில் தலா 5 செமீ, பூண்டி, ஊத்துக்கோட்டையில் தலா 3 செமீ மழை பதிவானது.

பூவிருந்தவல்லி, திருவள்ளூர், திருவாலங்காடு, பள்ளிப்பட்டு தலா 2 செமீ மழை பதிவானது. ஜமீன் கொரட்டூர், திருத்தணி, ஆர்.கே.பேட்டை, கும்மிடிப்பூண்டி தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது.
வானிலை: சென்னையின் பல பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. சில பகுதிகளில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. காலையில் சாலையில் ஏற்பட்ட பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, புதுக்கோட்டை, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரம் ஆங்காங்கே மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் ஒரு சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
வானிலை அறிவிப்பு: தமிழ்நாட்டில் அடுத்த 1 வாரத்திற்கு பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நேற்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. சென்னையில் இன்று மாலைக்கு பின் கனமழை பெய்யும். பகல் நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை; மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,
11.07.2024 மற்றும் 12.07.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
13.07.2024 முதல் 15.07.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
16,07.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்
லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி சின்னக்கல்லார் (கோயம்புத்தார் தலா 3 தேவாலா அவலாஞ்சி வைா வால்பாறை PTC (கோயம்புத்தூர் ?. வால்பாறை PAP 2 (கோயம்புந்தார்). மேல் பவானி (நீலகிரி), சின்கோனா (கோயம்புத்தூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தார். சோலையார் (கோயம்பத்தார் சிறுவாணி அடிவாரம் ஸ்ரீர் சுத்திகரிப்பு நிலையம்) (கோயம்புத்தூர்), உபாசி தேயிவை ஆராய்ச்சி அறக்கட்டளை (கோயம்புத்தூர்) தலா 1. .
-
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications