‛‛8 மாவட்டங்கள் குறி’’.. தமிழகத்தில் இன்று கொட்டப்போகும் கனமழை.. ஆரஞ்சு + மஞ்சள் ‛வார்னிங்’
சென்னை: தமிழகத்தில் இன்று மற்றும் நாளை என்று 2 நாட்களுக்கு 2 மாவட்டங்களுக்கு கன முதல் மிக கனமழைக்கான ‛ஆரஞ்ச் அலர்ட்', 6 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ‛மஞ்சள் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகமே தென்மேற்கு பருவமழையை எதிர்நோக்கி காத்து கொண்டிருக்கிறது. கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் வெளுத்தெடுத்த அதிகப்படியான வெயில் காரணமாக குளம், குட்டைகள் தண்ணீர் இன்றி வற்றி உள்ளன.

இதனால் தென்மேற்கு பருவமழையை எதிர்நோக்கி மக்கள் காத்துள்ளனர். இந்நிலையில் தான் கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெயில் குறைந்து இதமான சூழல் நிலவி வருகிறது.
குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் சாரல் மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. இந்நிலையில் தான் இன்றைய தினம் தமிழகத்தில் உள்ள 2 மாவட்டங்களுக்கு கன முதல் மிக கனமழைக்கான ‛ஆரஞ்ச் அலர்ட்' எச்சரிக்கையும், 6 மாவட்டங்களுக்கு ‛மஞ்சள் அலர்ட்' எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று முதல் ஜுன் 30ம் தேதி வரை ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேவேளையில் இன்றும், நாளையும், நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் இந்த பகுதிகளுக்கு ‛ஆரஞ்சு' அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒரு இடத்துக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படும் பட்சத்தில் அங்கு பலத்த காற்றுடன் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். அதாவது மழையின் அளவை பொறுத்தமட்டில் 24 மணிநேரத்தில் குறைந்தபட்சமாக 115.6 மில்லி மீட்டர் முதல் 204.4 மில்லி மீட்டர் அளவாக பதிவாகும்.
அதேபோல் திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் மலைப்பகுதிகளிலும், கன்னியாகுமரி மாவட்டத்தின் சில இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் இந்த 6 மாவட்டங்களுக்கும் கனமழைக்கான ‛மஞ்சள் அலர்ட' விடுக்கப்பட்டுள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டதால் 24 மணிநேரத்தில் குறைந்தபட்சம் 64.5 மில்லி மீட்டர் முதல் 115.5 மில்லிமீட்டர் வரை மழை பதிவாகும்.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
என் கட்சியில் நான் உள்பட யாரும் நிரந்தர எம்பி, எம்எல்ஏவாக இருக்க மாட்டார்கள்! அண்ணாமலை திட்டவட்டம்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்!












Click it and Unblock the Notifications