கிறிஸ்துமஸ் நாளில்.. மிக மிக அரிதான சம்பவம்.. சென்னையில் நடந்த சுவாரசியம்.. வெதர்மேன் சொன்ன தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிறிஸ்துமஸ் தினத்தில் மிக அரிதாக சென்னையில் மழை பெய்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் செய்துள்ள போஸ்டில், 26 மற்றும் 27-ம் தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழை பெய்யும். சென்னையில் 2001, 2003, 2022 மற்றும் தற்போது 2024 கிறிஸ்துமஸ் தினங்களில் அபூர்வமாக மழை பெய்துள்ளது.

கடந்த 25 ஆண்டுகளில், கிறிஸ்துமஸ் நாளில் 4 முறை மட்டும் மழை பெய்துள்ளது. சென்னை மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. பாண்டி, கடலூர், விழுப்புரம் போன்ற வட கடலோரப் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை, நாமக்கல் போன்ற உள் மாவட்டங்களிலும் மழை பெய்யும். மழையை ரசியுங்கள். இனி அடுத்த 6 மாதங்களில் மழைக்காக ஏங்குவோம். எனவே இந்த தாமதமான பருவமழைகளை போற்றுங்கள், என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் குறிப்பிட்டு உள்ளார்.

வானிலை மையம் வெளியிட்ட அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:

நேற்று மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து, இன்று (23-12-2024) காலை 08.30 மணி அளவில், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், தெற்கு ஆந்திர -வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவுகிறது.

இது மேலும், மேற்கு - தென்மேற்கு திசையில் நகர்ந்து, நாளை (24-12-2024), தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அருகில் நிலவக்கூடும்.

24-12-2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

25-12-2024: வடகடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

26-12-2024: வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

27-12-2024: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

28-12-2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

29-12-2024 மற்றும் 30-12-2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஒருசில பகுதிகளில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+