வங்கக் கடலில் உருவாகும் “டானா’ புயல்.. 23 ஆம் தேதி டார்கெட்.. அடிச்சு நொறுக்கப் போகுதா?
டெல்லி: வங்கக்கடலில் வரும் அக்டோபர் 23 ஆம் தேதி புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது. இது வரும் 23 ஆம் தேதி புயலாக உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு கத்தார் பரிந்துரைத்த "டானா" (DANA) என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது. மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 22 ஆம் தேதி காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். 23 ஆம் தேதி கிழக்கு மத்திய வங்கக் கடலில் புயலாக உருவாகும் என தெரிவித்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.

இந்த புயலுக்கு கத்தார் பரிந்துரைத்த டானா (DANA) என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த டானா புயல் வட மேற்கு திசையில் நகர்ந்து, ஒடிசா மேற்கு வங்கம் இடையே அக்டோபர் 24 ஆம் தேதி காலை கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓடிசா, மேற்கு வங்காளம் நோக்கி நகர்வதால் இந்த புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய வடகிழக்கு பருவமழை காலத்தில் உருவாகும் முதல் புயல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்பு குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், "வட தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அக்டோபர் 20, 21, 24-ம் தேதிகளில் பெரும்பாலான இடங்களிலும், 22, 23, 25-ம் தேதிகளில் ஒரு சில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களிலும், நாளை (அக்.21) கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்ட மலை பகுதிகள், நீலகிரி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், பெரம்பலூர் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications