மிக்ஜாம் புயல் எங்கே? வடதமிழகம்தான் டார்கெட்! சென்னைக்கு நள்ளிரவுதான் முக்கியம்!
சென்னை: சென்னை கடலோரத்தை மிக்ஜாம் புயல் நள்ளிரவு முதல் நாளை காலைக்குள் நெருங்குகிறது.
தென் கிழக்கு வங்கக் கடலில் நேற்று நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று புயலாக வலுப்பெற்றுவிட்டது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் விட்டுவிட்டு லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. அதன்படி சென்ட்ரல், எழும்பூர், தேனாம்பேட்டை, அண்ணாநகர், திநகர், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், வளசரவாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

அது போல் புறநகர் பகுதிகளான ஆலந்தூர், அம்பத்தூர், ஆவடி, பூந்தமல்லி, குன்றத்தூர், தாம்பரம், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்ள தயார் நிலையில் மாநகராட்சி நிர்வாகம், மின்சாரம், காவல், வடிகால் வாரியம் உள்ளிட்ட ஊழியர்களும் இரவு பகலாக பணியாற்றி வருகிறார்கள். வங்கக் கடலில் சென்னையிலிருந்து 340 கி.மீ. தூரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தம் மையம் கொண்டுள்ளது. இதன் வேகம் சற்று அதிகரித்தும் வருகிறது.
இது வடதமிழக கடலோரம் வழியாக தெற்கு ஆந்திராவுக்கு செல்லும். இதனால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையை கொடுக்கும். இந்த நிலையில் இதுகுறித்து சென்னை வெதர் ட்விட்டர் பக்கத்தில் வந்துள்ள தொடர் அப்டேட்டுகளை பார்ப்போம்.
ஆழ்ந்த காற்றழுத்தம் சென்னை கடற்கரையை இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலைக்குள் நெருங்கும். வடமேற்கு திசையில் புயல் நகரும் போது சென்னை, தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் மழை அதிகரிக்கும். கடலோர பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாகவே இருக்கும்.
இன்று மாலை 6 மணி முதல் நாளை அதிகாலை வரை சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. புயலானது நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே சரியாக எங்கு கரையை கடக்கும் என்பதில் சற்று இழுபறி நீடிக்கிறது. மக்கள் யாரும் இன்று முழுவதும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். காற்றின் வேகம் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் வீசும். இவ்வாறு சென்னை வெதர் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications