கலைந்த மேகம்! சுளீர் சூரியன்! சென்னைக்கு அடுத்த மழை எப்போது? 10 நாள் ரெஸ்ட்டாம்! வெதர்மேன் அப்டேட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை உள்பட வடதமிழக மாவட்டங்களில் இனி வெயில் இருக்கும். இத்துடன் சென்னைக்கு அடுத்த மழை எப்போது என்பது குறித்தும் வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.

Tamil nadu Weatherman

இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: சென்னை உள்பட ஒட்டுமொத்த வடசென்னைக்கும் இன்று வெயில் இருக்கும். சூரிய பிரகாசிக்கும். வடதமிழகத்தில் மேகக் கூட்டங்கள் கலைந்து வானம் தெளிவாக உள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை இருக்காது.

சென்னையில் அடுத்த மழை டிசம்பர் 16 அல்லது 17 இல் எதிர்பார்க்கலாம். எனவே சென்னைக்கு மழையிலிருந்து பெரிய பிரேக் இருக்கிறது. டெல்டா பகுதிகளான நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். அது போல் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளுக்கு அருகே இருக்கும் தென் தமிழக பகுதியான நெல்லை குன்றுகள், மற்ற பகுதிகளிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்தார்.

நேற்றே காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யாது. எனவே துணிகளை துவைத்து மாடியில் காய வைக்கலாம். மழை வந்துவிடுமோ என அஞ்சத் தேவையில்லை என்றும் நேற்றைய ட்வீட்டில் வெதர்மேன் தெரிவித்திருந்தார்.

டிட்வா புயலால் கடந்த 2 ஆம் தேதி முதல் சென்னையில் கனமழை பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்றுதான் மழை இல்லா நிலை இருந்தது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் கூறியிருப்பதாவது: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

07-12-2025 முதல் 11-12-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+