அக்வான் புயல் சென்னைக்கா? தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்த அப்டேட்! இதை கவனியுங்க!
சென்னை: இன்னும் உருவாகாத புயலுக்கு எதற்காக இவ்வளவு பில்டப் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் கேள்வி எழுப்பியிருக்கிறார். மட்டுமல்லாது புயல் சென்னையில் கரையை கடக்குமா? அல்லது ஆந்திராவுக்கு போகுமா? என்பது குறித்து தெரிந்துக்கொள்ள இன்னும் ஒருநாள் வெயிட் பண்ணனும் என்றும் கூறியிருக்கிறார்.
வழக்கமாக வடகிழக்கு பருவமழையின்போது புயல்கள் உருவாவது இயல்பானதுதான். இருப்பினும், இந்த ஆண்டு சூப்பர் எல்-நினோ உருவாகியிருப்பதால், புயல்களுக்கு பஞ்சமில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.

ஏற்கெனவே கடந்த 2 மாதங்களில் 2 புயல்கள் வந்துவிட்டன. இப்படி இருக்கையில் தற்போது 3வது புயல் உருவாகியிருக்கிறது. இந்த புயல் சென்னையில்தான் கரையை கடக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறி வரும் நிலையில், இதற்கான சாத்தியங்கள் குறித்து வெதர்மேன் விளக்கமளித்துள்ளார்.
அவர் தனது x பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, "நாளை கிடைக்கும் வானிலை மாதிரிகளை ஆய்வு செய்யும்போதுதான் சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதா? புயல் இந்த மாவட்டங்களில் கரையை கடக்குமா? என்று நமக்கு தெளிவை தரும்.
AI மாதிரிகள் வட தமிழகத்திற்கு சாதகமாக உள்ளன. ஆனால், செயல்பாட்டு மாதிரிகள் ஆந்திராவை காட்டுகின்றன. புயல் ஆந்திர பிரதேசத்தை நோக்கி சென்றாலும்.. நெல்லூர் பக்கத்தில் கரையை கடந்தால், சென்னை மற்றும் அதனனை ஒட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும். அதுவே புயல் கரையை கடக்கும் பகுதி வடக்கு ஆந்திரா, ஓங்கொல் அல்லது மசூலிப்படிணத்தை நோக்கி நகர்கிறது எனில்.. சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு மழைக்கான வாய்ப்பு குறைவு. பெரிய அளவுக்கு மழை இருக்காது.
புயல் வலுவாக வடக்கு நோக்கி நகர்வது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. புயல் வலுவற்றதாக இருந்தால்.. சென்னை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களுக்கும், வட தமிழகத்திற்கும் மழை கிடைக்கும். எனவே நாளைய மாதிரியில்தான் முழுமையான விவரம் தெரிய வரும்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், புயல் நெல்லூர் அல்லது அதற்கு கீழே கரையை கடந்தால்.. வட தமிழகம் மட்டுமே இதனால் பயன்பெறும். டெல்டா மற்றும் பிற பகுதிகள் மழையை பெறாது" என்று தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக டெல்டா வெதர்மேன் ஹேமசந்தர், புயல் தமிழகத்தில்தான் கரையை கடக்கும் என்று கூறியிருந்தார். இது சென்னை மக்களுக்கு அலர்ட் செய்தியாக மாறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
