நேற்று வெறும் ரோடுதான் நெனஞ்சது! இன்று சென்னை மீது சிவப்பு தக்காளி! செம ட்ரீட்டுதான்! வெதர்மேன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை உள்பட 4 மாட்டங்களில் இனி தினமும் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். மேலும் வடதமிழகத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும் என்பதையும் அவர் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் ஆங்காங்கே மழை பெய்த வண்ணம் உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: கேரளாவில் தென்மேற்கு பருவமழை வலுவிழந்து மழை பெய்யாது. வெயில் அடிக்கும். அதே வேளையில் சென்னை, தமிழ்நாடு, காஞ்சிபுரம் செங்கல்பட்டு உள்பட வட தமிழகத்திற்கு சிவப்பு தக்காளி உருவாவதற்கான அனைத்து சூழல்களும் உள்ளன.

weather weatherman rain

நேற்று சென்னையில் சாலைகள் எல்லாம் ஈரமாகும் அளவுக்கு மழை பெய்தது. இன்று சென்னை உள்பட 4 மாவட்டங்களில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம். அது போல் வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், புதுச்சேரி ஆகிய இடங்களில் இன்று மாலை அல்லது இரவு நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இனி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தினந்தோறும் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 6-ம் தேதி வரை இடி,மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வலுவான தரைக்காற்று 30 முதல் 40 கிமீ வேகத்தில் வீசக்கூடும். 7 மற்றும் 8-ம் தேதிகளில் மாநிலத்தில் பல பகுதிகளில் பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக பெரம்பலூர் மாவட்டம் தழுதலையில் 6 செமீ, நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 5 செமீ,நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி, கோவை மாவட்டம் சின்னக்கல்லார் ஆகிய இடங்களில் தலா4 செமீ, நீலகிரி மாவட்டம் நடுவட்டம், மேல் கூடலூர், கூடலூர் சந்தை, சேலம் மாவட்டம் சந்தியூர்,மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி,கோவை மாவட்டம் சின்கோனா ஆகிய இடங்களில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது.

மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் 4-ம் தேதி வரை சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ, வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+