காலியாக போகும் காவிரி.. வேலையை காட்டும் வெயில்! இந்த வருஷம் சம்பவம் இருக்கு! வெதர்மேன் வார்னிங்!
சென்னை: வழக்கமாக 'எல் நினோ' எனப்படும் காலநிலை மாற்றம் ஏற்படும்போதெல்லாம், காவரியின் நீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் கேரளாவில் பருவமழை குறையும். இப்படி இருக்கையில் இந்த ஆண்டும், 'எல் நினோ' உருவாக வாய்ப்பு இருக்கிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார்.
கடந்த 2015 மற்றும் 2023ம் ஆண்டுகளில் 'எல் நினோ' உருவாகியிருந்தது. இந்த காலங்களில் மேற்குறிப்பிட்ட இரண்டு பகுதிகளிலும், பருவமழையின் தாக்கம் இயல்பை விட குறைவாகவே இருந்தது.

'எல் நினோ' என்றால் என்ன?
தென்மேற்கு பருவமழைக்கு முக்கிய காரணம் பசிபிக் கடல்தான். இந்தோனேசியாவை ஒட்டியிருக்கும் பசிபிக் கடலின் மேற்பறப்பு நீர் சூடாகும்போது, பலமான காற்று வீசும். இந்த காற்று சூடான நீரை இந்தியா பக்கம் தள்ளும். இந்த நீர் ஆவியாகி, இந்த காற்றில் பயணித்து இந்தோனேசியா மற்றும் தென் இந்தியாவுக்கு தென்மேற்கு பருவமழையை கொடுக்கும். ஆனால், நீர் சூடாகும் சமயத்தில், காற்று பலமாக வீசவில்லை எனில், மழை மேகங்கள், பசிபிக் கடலின் கீழ் நோக்கி பயணித்து, தென் அமெரிக்க நாடுகளுக்கு மழையை கொடுக்கும்.
இப்படி நடக்கும் நிகழ்வின் பெயர்தான் 'எல் நினோ'. பசிபிக் கடலின் நீர் எந்த அளவுக்கு வெப்பமாவதை பொறுத்து 'எல் நினோ' இருக்கும். இந்த ஆண்டு, 'எல் நினோ' இருப்பதால் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியிருக்கிறார்.
வறட்சியாகும் காவிரி
இது குறித்து அவர் தனது x பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது. "எல் நினோ நிகழ்வுக்கும் காவிரி படுகை, கேரளா மழைகளுக்கும் எதிர்மறைத் தொடர்பு உண்டு. 2015 மற்றும் 2023 எல் நினோ ஆண்டுகளில் காவிரி படுகை, வால்பாறை, நீலகிரி, கேரளா பகுதிகளில் தென்மேற்கு பருவமழை மிகக் குறைந்தே பதிவானது. இந்த போக்கு கடுமையான மழைப்பற்றாக்குறையை உணர்த்துகிறது.
2023ம் ஆண்டு எல் நினோ
- தென் உள் கர்நாடகா பெற்ற மழை - 490 மி.மீ
- இயல்பு மழையின் அளவு - 678 மி.மீ
- பற்றாக்குறை மைனஸ் 28%
- கேரளா பெற்ற மழை - 1,327 மி.மீ
- இயல்பு மழை அளவு - 2,019 மி.மீ
- பற்றாக்குறை மைனஸ் 34%
2015ம் ஆண்டு எல் நினோ
- தென் உள் கர்நாடகா பெற்ற மழை - 606 மி.மீ
- இயல்பு மழையின் அளவு - 660 மி.மீ
- பற்றாக்குறை மைனஸ் 8%
- கேரளா பெற்ற மழை - 1,516 மி.மீ
- இயல்பு மழை அளவு - 2,040 மி.மீ
- பற்றாக்குறை மைனஸ் 26%
ஆக இந்த இரு ஆண்டுகளிலும் எல் நினோ மழையைப் பாதித்திருப்பதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இந்த மழைப்பற்றாக்குறை போக்குகளை கருத்தில் கொண்டு, நடப்பு பருவமழைக் காலத்தில் நீர் சேமிப்பை கவனத்தில் கொள்ள வேண்டும். குறைவான மழைக்கான மோசமான சூழ்நிலைக்கு விவசாயிகள் தயாராக இருக்க வேண்டும் என மழை ஆய்வு நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்" என்று கூறியுள்ளார்.
-
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்!












Click it and Unblock the Notifications