விடாமல் பெய்யும் மழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. முழு விபரம்
சென்னை: மழை காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. புதுச்சேரி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. நாகை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல செயல்படும். தஞ்சை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறைஅளிக்கப்பட்டு உள்ளது. கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. காரைக்காலிலும் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
வானிலை; 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு மற்றும் மாலை நேரங்களில் சென்னை, திண்டுக்கல், ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்தது. இந்த நிலையில் இன்று மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகக்கூடும் என்று சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. இது புயலாக மாறும் பட்சத்தில் தமிழ்நாட்டில் நல்ல மழை பெய்யும்.
இந்த வடகிழக்கு பருவமழையை தமிழ்நாட்டில் பொதுவாக நல்ல மழை பெய்யும். ஆனால் இந்த மாதம் பெரிதாக மழையே இல்லாமல் பொய்த்துவிட்டது. தீபாவளி நாளில் எல்லாம் இவ்வளவு வெயில் அடித்ததே இல்லை. ஆனால் இந்த முறை பெரிதாக மழையே இல்லை.
இந்த நிலையில்தான் காற்றழுத்த தாழ்வு பகுதி வருகின்ற 14-ஆம் தேதி வாக்கில் உருவாகும் நிலையில் மழை தீவிரம் அடையும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்று மழை எப்படி: இது போக கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று 15.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில
இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
வரும் நாட்களில் மழை: 16.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
17.11.2023 மற்றும் 18.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில
பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 செல்சியஸ் மற்றும்
குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில
பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32
செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): திருப்பூண்டி
(நாகப்பட்டினம்) 5, கிளானிலை (புதுக்கோட்டை), மண்டபம் (ராமநாதபுரம்), மணியாச்சி
(தூத்துக்குடி), கயத்தார் (தூத்துக்குடி) தலா 4, ஆயிக்குடி (தென்காசி), ராமநாதபுரம் KVK AWS
(ராமநாதபுரம்), பாம்பன் (ராமநாதபுரம்), ராமநதி அணைப் பகுதி (தென்காசி) தலா 3,
பாபநாசம் (திருநெல்வேலி), ஆயிங்குடி (புதுக்கோட்டை), கடனா அணை (தென்காசி),
மூலைக்கரைப்பட்டி (திருநெல்வேலி) 2, தானியமங்கலம் (மதுரை) 2, ஓட்டப்பிடாரம்
(தூத்துக்குடி), தங்கச்சிமடம் (ராமநாதபுரம்). தலைஞாயிறு (நாகப்பட்டினம்)2, நாகுடி
(புதுக்கோட்டை) தலா 2, ராமேஸ்வரம் (ராமநாதபுரம்), மேலூர் (மதுரை), கடம்பூர் (தூத்துக்குடி),
திருவாடானை (ராமநாதபுரம்), மேற்கு தாம்பரம்_SIT ARG (செங்கல்பட்டு), பேராவூரணி
(தஞ்சாவூர்), புலிப்பட்டி (மதுரை), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), பெரியாறு (தேனி),
இளையாங்குடி (சிவகங்கை) 1,
சாத்தான்குளம் ARG (தூத்துக்குடி) 1, தீர்த்தாண்டதானம்
(ராமநாதபுரம்), அதிராமப்பட்டினம் (தஞ்சாவூர்), சாத்தான்குளம் (தூத்துக்குடி), எச்சன்விடுதி
(தஞ்சாவூர்), நாலுமுக்கு (திருநெல்வேலி), சங்கரன்கோயில் (தென்காசி), அதிராமபட்டினம்
AWS (தஞ்சாவூர்), காயல்பட்டினம் (தூத்துக்குடி), எழுமலை (மதுரை), ஊத்து (திருநெல்வேலி),
மாஞ்சோலை (திருநெல்வேலி), நம்பியாறு அணை (திருநெல்வேலி), பள்ளமோர்குளம்
(ராமநாதபுரம்), நாங்குனேரி (திருநெல்வேலி), இடையப்பட்டி (மதுரை) தலா 1 மழை பெய்துள்ளது.
-
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம்












Click it and Unblock the Notifications