வெயில் ஓவரா இருக்கே.. ஜிம் செல்வோர் கவனம்.. இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே நோட் பண்ணுங்க மக்களே
சென்னை: கோடை வெப்பம் ஓவராக இருக்கும் நிலையில், ஜிம் செல்வோர் செய்ய வேண்டியவை என்ன.. செய்யக் கூடாதவை என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
இன்னும் கோடைக் காலம் உச்சத்தைத் தொடவில்லை. ஆனால், அதற்குள் தமிழகத்தில் பல இடங்களில் வெப்பம் புதிய உச்சம் தொட்டுள்ளது. இன்று மட்டும் தமிழ்நாட்டில் 15 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்தது..

அதிகபட்சமாக ஈரோட்டில் 107.6 டிகிரி பாரன்ஹீட்டை வெயில் பதிவாகி உள்ளது. தொடர்ந்து சேலம், திருப்பத்தூரில் 106.8 டிகிரி வெயில் பதிவாகி இருக்கிறது. சென்னையிலும் கூட மிக விரைவில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தைத் தொட்டுவிடும்.
கோடை வெப்பம்: அதீத வெப்பம் இருப்பதால் உடற்பயிற்சி செய்யும் போது சில விஷயங்களை நம் கவனத்தில் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அதிக உடற்பயிற்சி மற்றும் வியர்வை வெப்ப பக்கவாதம், குமட்டல், தலைவலி மற்றும் நீரிழப்பு ஆகிய பாதிப்புகளுக்குக் கூட வழிவகுக்கும். நீங்கள் நீண்ட நேரம் அதீத வெயிலில் இருந்தால் உங்கள் உடலின் இயற்கையான குளிரூட்டும் அமைப்பு தோல்வியடையத் தொடங்கும். இது சோர்வு மற்றும் வெப்ப பக்கவாதத்திற்கு வழிவகுக்கும்.
கோடைக் காலத்தில் உடற்பயிற்சி செய்பவர்கள் அதிக தண்ணீர் குடித்தால் மட்டும் போதாது.. ஏனெனில் உடற்பயிற்சியின் போது வியர்வையின் மூலம் உங்கள் உடலில் இருந்து தண்ணீர் மட்டுமின்றி எலக்ட்ரோலைட்டுகளும் உப்பும் கூட வெளியேறும். இந்த எலக்ட்ரோலைட்டுகள் தான் உடலில் உள்ள திரவங்களின் சமநிலையைச் சீராக்கவும் கட்டுப்படுத்தவும் உதவும்.
கவனம் மக்களே: எலக்ட்ரோலைட்டுகளில் பொட்டாசியம், சோடியம், குளோரைடு, பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் கால்சியம் ஆகியவை இருக்கும். இவை தசைப்பிடிப்பு, இதய அரித்மியா, பக்கவாதம் அவ்வளவு ஏன் மரணத்தைக் கூட ஏற்படுத்தும். சரி சம்மர் காலத்தில் ஜிம் செல்வோர் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்துப் பார்க்கலாம்.
முதலில் பகல் நேரத்தில் உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்கவும். குறிப்பாகக் காலை 10 மணி முதல் 3 மணி வரை வெப்பம் அதிகமாக இருக்கும் போது உடற்பயிற்சி செய்ய வேண்டாம். கோடைக் காலத்தில் அதிகாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்வதே பெஸ்ட். அதிகாலை முடியவில்லை என்றால் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு மாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்யலாம்.
தளர்வான உடைகள்: நீங்கள் வெளியில் சென்று ஜாக்கிங் போன்றவற்றைச் செய்கிறீர்கள் என்றால் தளர்வான உடைகளை அணியுங்கள். அப்போது தான் அதிக காற்றோட்டம் இருக்கும். அது உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். குறிப்பாக கட்டன் உடைகளை அணியுங்கள். அது வியர்வையை அதிகம் உரிஞ்சும். மேலும், டார்க் உடையை அணிந்தால் அது சூரிய ஒளியை அதிகம் ஈர்க்கும் என்பதால் லேசான உடைகளை அணிய வேண்டும்.
வெளியே உடற்பயிற்சிக்குச் செல்லும் போது மறக்காமல் சன் ஸ்கீன் போடுங்கள். சன் ஸ்கிரீனைப் பயன்படுத்தவில்லை என்றால் அது சருமத்தைப் பாதிக்கும். தோல் புற்றுநோயின் அபாயத்தையும் அதிகரிக்கும். சூரிய வெளிச்சம் நேரடியாகப் படுவதைக் குறைக்க முழு கை ஆடைகளை அணியுங்கள்.
தண்ணீர் குடியுங்கள்: உடற்பயிற்சி செய்வதற்கு முன் குறைந்தது இரண்டு கிளாஸ் தண்ணீரைக் குடிக்கவும். ஒரு தண்ணீர் பாட்டிலை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள். உடற்பயிற்சியின் இடையில் தண்ணீரைப் பருகவும். ஒர்க் அவுட்டை முடித்த பிறகு அதிகளவில் தண்ணீர் குடிக்கவும். பழங்கள் மற்றும் காய்கறிகளுடன் எலக்ட்ரோலைட்டுகளை எடுத்துக் கொள்ளுங்கள். ஸ்போட்ஸ் டிரிங்குகளை தவிர்ப்பது உடலுக்கு நல்லது.
நோட் பண்ணுங்க: உடற்பயிற்சி செய்யும் போது திடீரென மயக்கம் அல்லது குமட்டல் போன்ற உணர்வு ஏற்பட்டால் உடனடியாக உடற்பயிற்சியை நிறுத்திவிடுங்கள். இதயத் துடிப்பு ஓவராக அதிகரிப்பது, லேசான தலைச்சுற்றல், தலைவலி, தசைப்பிடிப்பு, வாந்தி ஆகியவை ஏற்பட்டால் அதை அலட்சியம் செய்யக்கூடாது. உடனடியாக கொஞ்ச நேரம் உட்கார்ந்து, தண்ணீர் குடியுங்கள்.. உடல்நிலை அப்போதும் நார்மல் ஆகவில்லை என்றால் உடனடியாக மருத்துவரிடம் செல்லவும்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications