தமிழ்நாட்டில் தீபாவளி அன்று மழை பெய்யுமா? வானிலை எப்படி இருக்கும்? வானிலை மையம் எச்சரிக்கை
சென்னை: தமிழ்நாட்டில் தீபாவளி அன்று வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதில் தீபாவளி அன்று.. தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதேபோல் அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

27.10.2024: தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
28.10.2024 முதல் 30.10.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
31.10.2024 முதல் 01.11.2024 வரை: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நேற்று மழை: நேற்று காமாட்சிபுரம் (திண்டுக்கல்), சிறுகுடி (திருச்சிராப்பள்ளி), ராஜபாளையம் (விருதுநகர்), திருமூர்த்தி அணை (திருப்பூர்), ராமநதி அணைப் பகுதி (தென்காசி), காரைக்குடி (சிவகங்கை), கன்னிமார் (கன்னியாகுமரி), வம்பன் KVK AWS (புதுக்கோட்டை), கீழ் அணைக்கட்டு (தஞ்சாவூர்), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), திருமூர்த்தி IB (திருப்பூர்), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), சென்னிமலை (ஈரோடு), குளித்தலை (கரூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்), வைகை அணை (தேனி), கவுந்தப்பாடி (ஈரோடு), பெரியகுளம் PTO (தேனி), தென்காசி (தென்காசி), மடத்துக்குளம் (திருப்பூர்), கொள்ளிடம் (மயிலாடுதுறை), ஒட்டன்சத்திரம் (தர்மபுரி), திருவாடானை (ராமநாதபுரம்), பெரியாறு (தேனி), மூலனூர் (திருப்பூர்), ஆண்டிபட்டி (தேனி), கிளன்மார்கன் (நீலகிரி), தென்காசி AWS (தென்காசி), ஆயிக்குடி (தென்காசி), கோபிசெட்டிபாளையம் (ஈரோடு), கொட்டாரம் (கன்னியாகுமரி), அடவிநயினார் அணை (தென்காசி), ஆரல்வாய்மொழி (கன்னியாகுமரி), கடனா அணை (தென்காசி), புலிப்பட்டி (மதுரை), ராதாபுரம் (திருநெல்வேலி), தீர்த்தாண்டதானம் (ராமநாதபுரம்) தலா 2,
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்: 27.10.2024 முதல் 30.10.2024 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை.
வங்கக்கடல் பகுதிகள்: 27.10.2024 முதல் 30.10.2024 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை.
அரபிக்கடல் பகுதிகள்: 27.10.2024:கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சத்தீவு - மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
27.10.2024 முதல் 30.10.2024 வரை: ஏதுமில்லை மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications