ஒருவழியாக அந்த "ஹாப்பி நியூஸை" சொன்ன.. வானிலை வல்லுனர்கள்.. தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் நிம்மதி!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று வானிலை எப்படி இருக்கும், வெயில் தொடருமா என்று சென்னை ரெயின்ஸ் வானிலை அமைப்பு கணிப்பு வெளியிட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது மழைக்காலம் நிலவ வேண்டும். ஆனால் மாறாக கடுமையான வெயில் காலம் நிலவி வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது நிலவும் வெப்பநிலையை பல வானிலை வல்லுனர்கள், " கோடை 2.0, சம்மர் ரிட்டர்ன்ஸ்" என்று அழைக்க தொடங்கி உள்ளனர்.

கோடைகாலம் முடிந்த பின்பும் கடந்த ஒரு வாரமாக தமிழ்நாட்டில் 39 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பநிலை உள்ளது. இது 41ஐ அடையும் வாய்ப்புகள் உள்ளன. இதன் அர்த்தம் வரும் நாட்களில் வெப்பம் கொளுத்த போகிறது. இன்று தமிழ்நாட்டில் 41 டிகிரி செல்ஸியஸ் வரை உயரும் வாய்ப்புகள் உள்ளன. முக்கியமான சென்னை போன்ற கடலோர மாவட்டங்களிலும் வேலூர் போன்ற உள்ளூர் மாவட்டங்களிலும் வெயில் உச்சத்தில் இருக்கும்.
வரும் நாட்களில் வெப்பநிலை பல மாநிலங்களில் 100 டிகிரி பேரன்ஹீட்டை தொட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. நேற்று தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் 40 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை நிலவியது குறிப்பிடத்தக்கது.
எப்படி இருக்கும்?: இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் இன்று வானிலை எப்படி இருக்கும், வெயில் தொடருமா என்று சென்னை ரெயின்ஸ் வானிலை அமைப்பு கணிப்பு வெளியிட்டு உள்ளது. தற்போது மழைக்காலம் பிரேக் எடுத்துள்ளது. இதனால் வெப்பநிலை அதிகரித்துள்ளது. அதே சமயம் வெப்பசலனம் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை பெய்யும்.
தென் மாவட்டங்கள், அருகே உள்ள டெல்டா மாவட்டங்கள் இந்த மழைக்கான ஹாட் ஸ்பாட் மாவட்டங்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை நகர பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளன என்று சென்னை ரெயின்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
வானிலை மையம்: இது தொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வெப்பசலனம் காரணமாக 09.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது
முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 10.08.2023 மற்றும் 11.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 12.08.2023 முதல் 14.08.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிய இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை:
08.08.2023 மற்றும் 09.08.2023: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்; ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 - 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை
முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஓட்டியே இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரக்கில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): குடியியான்மலை (புதுக்கோட்டை) 4. ஸ்ரீமஷ்ணம் (கடலூர்) 3. வானமாதேவி (கடலூர்), பண்ரூட்டி (கடலூர்), மதுரை வடக்கு, புலிப்பட்டி (மதுரை), சிதம்பரம் (கடலூர்), சிவகங்கை, அண்ணாமலை நகர் (கடலூர்), அரிமளம் (புதுக்கோட்டை), காரையூர் (புதுக்கோட்டை), மதுரை தெற்கு. சிதம்பரம் AW5 (கடலூர்) தலா 2, பிள்ளையார்குப்பம் (கள்ளக்குறிச்சி), சித்தம்பட்டி (மதுரை), ஆட்சியர் அலுவலகம் (கடலூர்), தனிமங்கலம் (மதுரை). கச்சிராயப்பாளையம் (கள்ளக்குறிச்சி), மேதூர் (மதுரை), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்). விழுப்புரம், கள்ளக்குறிச்சி. சத்தியார் (மதுரை), ஆலங்குடி (புதுக்கோட்டை) தலா 1.
மீனவர்களுக்கான எச்சரிக்கை;
தமிழகடலோரப்பகுதிகள் 08.08.2023 முதல் 10.08.2023 வரை: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும், என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications