Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் அப்படியே மாறிய வானிலை.. இன்று என்ன நடக்கும் தெரியுமா? எக்ஸ்பர்ட் தந்த வார்னிங்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மற்றும் தமிழ்நாட்டில் இன்று வானிலை எப்படி இருக்கும் என்று சென்னை ரெயின்ஸ் வானிலை அமைப்பு கணிப்பு வெளியிட்டு உள்ளது.

இது தொடர்பாக அவர்கள் செய்துள்ள போஸ்டில், காற்றழுத்த தாழ்வு பகுதி வங்கக்கடலில் தீவிரம் அடைந்து உள்ளது. இதனால் தெலுங்கானாவில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு ஹைதராபாத்தில் மழை குறைவதற்கான வாய்ப்புகள் இல்லை. இன்று தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இல்லை.

தமிழ்நாட்டில் இன்று வறண்ட வானிலை காணப்படும். சென்னையில் நேற்றைவிட இன்று வறண்ட வானிலையே இருக்கும் என்று சென்னை ரெயின்ஸ் வானிலை அமைப்பு கூறி உள்ளது.

What will happen in the Tamil Nadu Weather Today? Chennai rains update

இது தொடர்பாக இந்திய வானிலை மையமும் எச்சரிக்கை விடுத்துள்ளது. 1.நேற்று (25.07.2023) மாலை வடக்கு ஆந்திரா - தெற்கு ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. இது இன்று (26.07.2023) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நிலவுகிறது.

2.மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 26.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், இராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

26.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

27.07.2023 முதல் 31.07.2023 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): அவலாஞ்சி (நிலகிரி) 38, சின்னகல்லாறு (கோயம்புத்தூர்) 12, மேல் பவானி (நீலகிரி) 11, வொர்த் எஸ்டேட் (நீலகிரி), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), தேவாலா (நீலகிரி) தலா 9, சின்கோனா (கோயம்புத்தூர்) 8, சோலையார் (கோயம்புத்தூர்), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), பந்தலூர் தாலுகா அலுவலகம் (நீலகிரி), பார்வூட் (நீலகிரி) தலா 7, ஹரிசன் மலையாள லிமிடெட் (நீலகிரி)} 6, டிஜிபி அலுவலகம் (சென்னை), கூடலூர் பஜார் (நீலகிரி), மேல் கூடலூர் (நீலகிரி). சிறுவாணி அடிவாரம் (கோயம்புத்தூர்). வூட் பிரையர் எஸ்டேட் (நிலகிரி) தலா 5, நடுவட்டம் (நீலகிரி), க்ளென்மார்கன் (நீலகிரி), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) தலா 4 தொண்டாமுத்தூர் (கோயம்புத்தூர்).

அண்ணா பல்கலைக்கழகம் ARG (சென்னை), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை). எமரலாகி (நீலகிரி), தாம்பரம் (செங்கல்பட்டு எம்ஜிஆர் நகர் (சென்னை), கன்றத்தூர் (காஞ்சிபுரம்], ஆலந்தூர் (சென்னை), சென்னை விமான நிலையம், நந்தனம் ARG (சென்னை), மேற்கு தாம்பரம் ARG (சென்னை) தலா 3. நாலுமக்கு (திருநெல்வேலி, ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), ஊத்து (திருநெல்வேலி), பாப்பாரப்பட்டி KVK ANS (தருமபுரி), PWD மாக்கினாம்பட்டி (கோயம்புத்தூர்), சோழிங்கநல்லூர் (சென்னை), செம்பரம்பாக்கம் (திருவள்ளூர்), ஆலங்காயம் (திருப்பத்தூர்). பூந்தமல்லி ARG (திருவள்ளூர்), பொள்ளாச்சி (கோயம்புத்தூர்), அரக்கோணம் (ராணிப்பேட்டை), கல்லட்டி (நீலகிரி), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), பெரியார் (தேனி), கந்தா பாலம் (நீலகிரி), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), சத்யபாமா பல்கலைக்கழகம் ARG (செங்கல்பட்டு), திருப்போரூர் (செங்கல்பட்டு), தாமரைப்பக்கம் (திருவள்ளூர்), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), பென்னாகரம் (தருமபுரி). கரலக்கோடு (கன்னியாகுமரி), முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி). செங்கல்பட்டு ராசிபுரம் (நாமக்கல். கொடநாடு (நீலகிரி). நாட்றம்பள்ளி (திருப்பத்தூர்), வாணியம்பாடி (திருப்பத்தூர்), ஆனைமலை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), பாலக்கோடு (தருமபுரி), பொன்னை அணை (வேலூர்), உதகமண்டலம் (நீலகிரி). ஆனைமடுவு அணை (சேலம்), சோழவரம் (திருவள்ளூர்), பள்ளிக்கரணை ARG (சென்னை) தலா 2, பூந்தமல்லி (திருவள்ளூர்),

காக்காச்சி (திருநெல்வேலி), தேக்கடி (தேனி), அழகரை எஸ்டேட் (நீலகிரி), சந்தியூர் KVK AMS (சேலம்), ராயக்கோட்டா (கிருஷ்ணகிரி), குன்னூர் PTO (நீலகிரி), பாலமோர் (கன்னியாகுமரி), காவேரிப்பாக்கம் (இராணிப்பேட்டை), தருமபுரி PTO, ஆவடி (திருவள்ளூர்), கொரட்டூர் (திருவள்ளூர்), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர்), ஆழியாறு (கோயம்புத்தூர்), அடவிநயினார்கோயில் அணை (தென்காசி). ஐம்புகட்டப்பட்டி (கிருஷ்ணகிரி), தக்கலை (கன்னியாகுமரி), ஊன்னூர் (நீலகிரி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), பாரூர் (கிருஷ்ணகிரி), கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), பாலர் அணைக்கட்டு (இராணிப்பேட்டை), ஆரணி (திருவண்ணாமலை), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி], பொன்னேரி (திருவள்ளூர்), தலைவாசல் (சேலம்), அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை), ஆம்பூர் (திருப்பத்தூர்), திற்பரப்பு (கன்னியாகுமரி), திருப்பத்தூர்.

பெரம்பூர் (சென்னை), கிணத்துக்கடவு (கோயம்புத்தூர்), மாதவரம் AVS (திருவள்ளூர்), தருமபுரி, டேனிஷ்பேட்டை (சேலம்), பர்லியார் (நீலகிரி), கரியகோவில் அணை (சேலம்), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), தளி (கிருஷ்ணகிரி), சென்னை நுங்கம்பாக்கம், மணிமுத்தாறு அணை பொதுப்பணித்துறை (கள்ளக்குறிச்சி). கலவை பொதுப்பணித்துறை (இராணிப்பேட்டை). கிருஷ்ணகிரி நெடுங்கல் (கிருஷ்ணகிரி), பெனுகொண்டாபுரம் (கிருஷ்ணகிரி), கோத்தகிரி (நீலகிரி), Rad-2 கோலியனூர் (விழுப்புரம்), தம்மம்பட்டி (சேலம்), வாலாஜாபாத் (காஞ்சிபுரம், புழல் ARG (திருவள்ளூர்), மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), கன்னிமார் (கன்னியாகுமரி), ஏதாப்பூர் (சேலம்), பூண்டி (திருவள்ளூர்), எண்ணூர் AVS (திருவள்ஊர்), கள்ளக்குறிச்சி, திரூர் KVK AWS (திருவள்ளூர்), விழுப்புரம் (விழுப்புரம்), விரிஞ்சிபுரம் AWS (வேலுர்), புத்தன் அணை (கன்னியாகுமரி), சின்னார் (கிருஷ்ணகிரி), KRP அணை (கிருஷ்ணகிரி), போளூர் (திருவண்ணாமலை), மேட்டூர் (சேலம்) தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை
வங்கக்கடல் பகுதிகள்

27.07.2023 & 28.07.2023: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு-தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

29.07.2023: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு-தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

30.07.2023 & 31.07.2023: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

What will happen in the Tamil Nadu Weather Today? Chennai rains update

இலங்கை கடலோரப்பகுதிகள், தெற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள் 25.07.2023 முதல் 27.07.2023 வரை: இலட்சத்தீவு பகுதிகள், வடக்கு கேரள-கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்க அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
28.07.2023 & 29.07.202 கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள் என்று கூறப்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+