இன்று இரவு என்ன நடக்கும்? தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை.. நோட் பண்ணுங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் பெய்ய உள்ள மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார். தென் சென்னை மக்கள் எதிர்பார்த்தது போலவே காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை முழுவதும் நல்ல மழை பெய்துள்ளது.

இப்போது சீரான மழை அடுத்த 2 மணி நேரங்களுக்கு தொடரும். பின்னர் மழையில் கொஞ்சம் இடைவெளி இருக்கும். முதலில் தென் சென்னை, ஈசிஆர் மற்றும் ஓஎம்ஆர் ஆகிய இடங்களில் மழை நின்று பின்னர் மத்திய மற்றும் வடசென்னையில் மழை நிற்கும்.

tamilnadu weatherman summer weather news

அதன்பின் மீண்டும் இரவு முதல் நாளை காலை வரை மழை பெய்யும். பூண்டி, செம்பரம்பாக்கம் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்யும். தற்போதைக்கு, கரையோரப் பகுதிக்கு அருகாமையில் தாழ்வு பகுதி காரணமாக மழை மேகங்கள் அதிகமாக கூடி உள்ளன என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மழை: தென்மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வேகமாக நகர்ந்து வருகிறது.

மேற்கு நோக்கி நகர்ந்து, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டி நிலவி வருகிறது. இந்த தாழ்வு மையம் தமிழ்நாடு நோக்கி நகர தொடங்கி உள்ளது. அதாவது வடக்கு தமிழகம் - தெற்கு ஆந்திர பிரதேசம் நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் சென்னையில் மழை தீவிரம் அடைந்து வருகிறது. இந்த தாழ்வு பகுதி எங்கே செல்கிறது.. எங்கே இருக்கிறது என்ற புகைப்படங்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன. சென்னையில் இருந்து சுமார் 360 கிமீ தொலைவில் இந்த புயல் சின்னம் உள்ளது.

இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழை தொடரும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது.

வானிலை எப்படி இருக்கும்? காற்றழுத்த தாழ்வு காரணமாக 6 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மற்றும் புதுக்கோட்டை இடங்களில் கனமழை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நாளை தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+