டானா புயலின் கண்.. கரையை கடக்கும் நேரத்தில்.. எவ்வளவு வேகத்தில் காற்று வீசும்.. வெளியான தகவல்!
சென்னை: டானா புயல் கரையை கடக்கும் நேரத்தில்.. அதன் கண் கரையை கடக்கும் நேரத்தில் எவ்வளவு வேகத்தில் காற்று வீசும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
டானா புயல் தற்போது வேகமாக வலிமை அடைந்து வருகிறது. தற்போது புயலாக உருவாகி உள்ள டானா இன்று மாலைக்குள் வலிமை அடையும். மத்திய கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய வடக்கு அந்தமான் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறி உள்ளது. தற்போது சென்னையில் இருந்து 1450 கிலோ மீட்டர் தூரத்திற்கு போர்ட் பிளேயருக்கு வடக்கே உள்ளது.

மேற்கு வங்கத்தில் இருந்து தெற்கில் 290 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த தாழ்வு மண்டலம் உள்ளது.மத்திய கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய வடக்கு அந்தமான் கடலில் நேற்று முதல்நாள் காலை (அக்.21) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இன்று காலை இது புயலாக மாறியது. பலத்த சேதத்தை டானா புயல் ஏற்படுத்த போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய வடக்கு அந்தமான் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது.
காற்று மோசமாகும்: இந்த புயல் காரணமாக காற்று மிக வேகமாக வீசும். கரையை கடக்கும் போது 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கு இடையே காற்று வேகம் 120 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் இன்று காலை (அக்.22) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதையடுத்து நாளை மத்திய கிழக்கு வங்கக் கடலில் புயலாக மாறி ஒடிசா, மேற்கு வங்கம் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் இந்த தாழ்வு பகுதி அக்.24இல் மேற்குவங்கம், ஒடிசா கடற்கரையையொட்டி 'டானா' புயல் கரையை கடக்கக்கூடும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
தமிழ்நாடு வெதர்மேன் அறிவிப்பு: தமிழ்நாட்டில் இன்று மற்றும் நாளை மழை பெய்ய வாய்ப்புள்ள இடங்கள் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் செய்துள்ள போஸ்டில், தமிழகம் மற்றும் கேரளாவில் இன்று முதல் நாளை வரை கொங்கு (மேற்கு), தெற்கு உள்பகுதி மற்றும் வடக்கு உள்பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. கன்னியாகுமரி, ராமநாதபுரம், தூத்துக்குடி என தென் தமிழகம் அனைத்திலும் கனமழை பெய்யும்..
தற்போது வீசும் காற்றால் பெங்களூரு மீண்டும் மழைக்கான ஹாட் ஸ்பாட்டில் உள்ளது. இன்னும் ஒரு நாள் கண்டிப்பாக மழை பெய்யும். அதன்பின் அக்டோபர் 25 முதல் பெங்களூர் மழைக்கு நீண்ட இடைவேளை விடப்படும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications