புயல் வெள்ளத்தால் சேதம் அடைந்த சென்னை சாலைகள்.. எப்போது சரியாகும்? வாகன ஓட்டிகளுக்கு முக்கிய தகவல்
சென்னை: சென்னையில் தொடர் மழை வெள்ளம் முடிந்து உள்ள நிலையில் சேதமடைந்த சாலைகளை உடனுடக்குடன் சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அடுத்த 3 வருடங்களுக்குள் சென்னையில் மொத்தமாக சாலைகள் சரி செய்யப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வங்கக்கடலில் கடந்த நவம்பர் 26ம் தேதி உருவான மிக்ஜாம் புயல் சென்னையை கடந்த 2 வாரங்களுக்கு முன் தாக்கியது. தமிழ்நாடு கடலோர பகுதியை நெருங்கி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியது. அதன்பின் ஆந்திராவுக்கு சென்று நெல்லுார், மசூலிப்பட்டினம் அருகே இந்த புயல் கரையை கடந்தது.

சென்னை பாதிப்பு ஏன்?: சென்னையை இந்த புயல் நேரடியாக தாக்கவில்லை என்றாலும் சென்னைக்கு அருகிலேயே புயல் மையம் கொண்டு இருந்ததுதான் எல்லா பாதிப்புக்கும் காரணம். இந்த புயல் சென்னைக்கு அருகே 100 கிமீ தூரத்தில் நகர தொடங்கியது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் புயலின் வேகம் 10 கிமீதான். அதாவது 1 மணி நேரத்திற்கு 10 கிமீ தூரம் மட்டுமே நகரும்.
அதே சமயம் இந்த புயல் கரையை நோக்கி நகர்ந்து வந்தது. அதாவது கிழக்கு திசையில் நகர்ந்து வந்தது. இதனால் சென்னைக்கு வடக்கு திசையில் புயல் தூரமாக சென்றாலும் கிழக்கு திசையில் அது அருகில் இருந்து கொண்டே இருந்தது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் அந்த புயல் கிட்டத்தட்ட 17 மணி நேரம் சென்னைக்கு அருகிலேயே இருந்தது. சென்னைக்கு அருகே 100 -200 கிமீ தூரத்திலேயே புயல் இருந்தது.
அதுதான் சென்னைக்கு பெரிய சிக்கலாகி மாறியது. 100 கிமீ தூரத்தில் கிட்டத்தட்ட ஒரு நாள் முழுக்க இருந்தது. இதனால் கடுமையான மழை புரட்டி எடுத்து வெள்ளத்தை ஏற்படுத்தியது .
சாலை சீரமைப்பு பணி: சென்னையில் தொடர் மழை வெள்ளம் முடிந்து உள்ள நிலையில் சேதமடைந்த சாலைகளை உடனுடக்குடன் சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சேதம் அடைந்த சாலைகள் சிமெண்ட் சாலைகள் மூலம் பேட்ச் செய்யப்பட்டு வருகின்றன. இதனால் உடனுக்குடன் குழிகள் மூடப்படுகின்றன.
தமிழ்நாடு முழுக்க பல்வேறு காரணங்களுக்காகக் சாலை பணிகள் நடந்து வருகின்றன. சாலைகளை விரிவு செய்வது, பாதாள சாக்கடை அமைப்பது, கழிவு நீர் குழாய்களை அமைப்பது, கேபிள் அமைப்பது, மழை நீர் வடிகால் சென்னையில் அமைப்பது, மின்சார வடங்களை அமைப்பது, பாலம் கட்டுவது, சென்னையில் செய்வது என்று பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.
இந்த பணிகள் அனைத்தையும் கடந்த மாத இறுதிக்குள் முடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அதன்படியே பணிகள் முடிந்தன . இந்த நிலையில்தான் சென்னையில் தொடர் மழை பெய்து வரும் நிலையில் சேதமடைந்த சாலைகளை உடனுடக்குடன் சீரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
முதல்வர் ஸ்டாலின்: முன்னதாக முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், சென்னை, புறநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் நிலை மிகவும் மோசமாக உள்ளது என்று எனக்கு தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன. அதேபோல் தமிழ்நாடு பல்வேறு மாவட்டங்களிலும், சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாவதோடு, சிறு விபத்துக்கள் ஏற்படும் செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இது ஏற்புடையதல்ல.
மழைநீர் வடிகால் பணிகள், குடிநீர் வாரியப் பணிகள், மெட்ரோ இரயில் பணிகள், மின்வாரியப் பணிகள் என பல்வேறு பணிகள் காரணமாக மட்டுமல்லாமல், பொதுவாக பழைய சாலைகள் நிலை போதிய பராமரிப்பு இல்லாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலை மாற்றப்படவேண்டும். நம் மாநில சாலைகள் தரமானதாக, மக்கள் பாராட்டப்படும் வகையில் அமைக்கப்படவேண்டும். இதனை வெறும் அறிவுரையாக மட்டும் நான் கூறவில்லை. மாண்புமிகு அமைச்சர் பெருமக்களும், அரசு செயலாளர்களும், தலைவர்களும் இதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்., என்று உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications