மிக்ஜாம் புயல் இப்போது எங்கே இருக்கிறது.. தமிழ்நாட்டிற்கு எப்போது வரை ஆபத்து? வெளியான முக்கிய தகவல்
சென்னை: மிக்ஜாம் புயல் தற்போது சென்னைக்கு மிக அருகே உள்ளது. இதன் காரணமாக சென்னையில் மிக மிக கனமழை பெய்து வருகிறது.
இந்த புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த புயல் தற்போது எங்கே உள்ளது. இனி எங்கே செல்லும் என்பது தொடர்பான விவரங்கள் வானிலை ஆய்வு மையம் மூலம் வெளியிடப்பட்டு உள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் திருவள்ளூர், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் 'மிக்ஜாம்' புயல் நகர்ந்து வருவதால் , பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வர வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எங்கே இருக்கிறது மிக்ஜாம் புயல்: வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் 'மிக்ஜாம்' புயல் நேற்று 11.30 மணி அளவில் அதே பகுதிகளில் புதுச்சேரிக்கு கிழக்கு- வடகிழக்கே சுமார் 250 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு கிழக்கு- தென்கிழக்கே சுமார் 110 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 04-12-2023 முற்பகல் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவக்கூடும். பிறகு தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து 05-12- 2023 முற்பகல் தெற்கு ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே தீவிர புயலாக கடக்கக்கூடும்.
புயல் வட-வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் நிலையில்,சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை அளவு: இந்த புயல் காரணமாக பின்வரும் மாவட்டங்களில் பெய்த மழை அளவு,
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு!
செம்பரம்பாக்கம் - 16.2 செ.மீ.
குன்றத்தூர் - 12 செ.மீ.
ஸ்ரீபெரும்புதூர் - 13 செ.மீ.
காஞ்சிபுரம் - 9 செ.மீ.
வாலாஜாபாத் - 8.8 செ.மீ.
உத்திரமேரூர் - 8.1 செ.மீ.
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின் அளவு:
ஆவடி - 28 செ.மீ.
சோழவரம் - 20 செ.மீ
பொன்னேரி -19 செ.மீ
செங்குன்றம் - 17 செ.மீ
தாமரைப்பக்கம் - 17 செ.மீ
கும்மிடிப்பூண்டி - 15 செ.மீ
ஊத்துக்கோட்டை - 15 செ.மீ
திருவள்ளூர் - 15 செ.மீ
பூந்தமல்லி - 14 செ.மீ
ஜமீன் கொரட்டூர் - 12 செ.மீ
திருத்தணி - 12 செ.மீ
பூண்டி - 12 செ.மீ
திருவாலங்காடு - 10 செ.மீ
பள்ளிப்பட்டு - 6 செ.மீ
ஆர்கே பேட்டை - 4 செ.மீ
சென்னையில் வளசரவாக்கம் 203.1
மலர் காலனி 194.7
பெருங்குடி 189.3
கோடம்பாக்கம் 179.4
சோழிங்கநல்லூர் 177.3
அடையார் 166.5
புழல் 165
பெருங்குடி 160.2
கொளத்தூர் 157.2
அம்பத்தூர் 152.4
தேனாம்பேட்டை 145.5
திரு.வி.கே நகர் 143.1
முகலிவாக்கம் 142.2
ஐஸ் ஹவுஸ் 141.6
அண்ணாநகர் 140.4 மழை பெய்துள்ளது.












Click it and Unblock the Notifications