டிட்வா புயல் எங்கே உள்ளது? எங்கே செல்லும்? தமிழ்நாட்டை தாக்குமா? இந்த போட்டோஸ் பாருங்க!
சென்னை: புலி வருது.. புலி வருது என்று சொல்வார்களே.. அப்படி ஒரு கதையாக மாறிவிட்டது வங்கக்கடலில் உருவாகும் புயல் சின்னங்கள். கடந்த 3 வாரங்களில் மட்டும் கிட்டத்தட்ட 3 புயல்கள் உருவாகிவிட்டன. நானும் ரவுடிதான் என்று வீராப்பாக வரும் புயல்கள்.. அப்படியே வரட்டாம் மாமே டுர்ர்ர் என்று கூறிவிட்டு எஸ்கேப் ஆகி விடுகிறது.
மொந்தா புயல் முதலில் உருவானது.. ஆஹா பெயரே இப்படியே இருக்கே.. என்று பயப்பட்டால்.. சுகர் வந்த சுனாமி போல எதுவும் செய்யாமல் காணாமல் போய்விட்டது மொந்தா புயல். அடுத்து வந்த சென்யார் புயலும்.. நடு பெஞ்சில் அமர்ந்து இருக்கும் அமைதியான மாணவன் போல.. எதுவும் செய்யாமல் மறைந்து. தோற்றம் எழுதுவதற்கு முன் மறைவு தேதி எழுதும் அளவிற்கு வேகமாக ஓடிவிட்டது.
இப்படிப்பட்ட நிலையில்தான் வங்கக்கடலில் தற்போது டிட்வா புயல் மையம் கொண்டு உள்ளது. இது எங்கே உள்ளது? என்ன செய்யும்? எங்கே தாக்கும்? என்பதை எல்லாம் கீழே கொடுக்கப்பட்டு உள்ள கிராபிக்ஸ் புகைப்படங்கள் வழியாக காண்போம்!
புயல் எங்கே உள்ளது?
குமரிக் கடல், அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் டிட்வா புயலாக நிலவி வருகிறது.

சென்னையில் இருந்து எவ்வளவு தூரம்?
டிட்வா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 620 கி.மீ. தொலைவிலும் புதுவைக்கு தென்கிழக்கே 520 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

புயலின் ரூட் என்ன?
வடமேற்கு திசையில் நகர்ந்து டெல்டா மாவட்டங்களுக்கு அருகே வரும். அதாவது நவம்பர் 29ம் தேதி புயலின் மேற்கு பகுதி காவிரி டெல்டா மாவட்டங்கள் அருகே வந்து விழும்.

டெல்டாவில் மழை பெய்யுமா?
நவம்பர் 28 (வெள்ளி) இரவு மழை டெல்டாவில் பெய்ய துவங்கும். நவம்பர் 30ம் தேதி (ஞாயிறு) காலை வரை மழை தீவிரமாக பெய்யும். நாகப்பட்டினம், திருவாரூர், காரைக்கால், மயிலாடுதுறை, தஞ்சாவூர் மாவட்டங்களில் அநேக இடங்களில் மிக கனமழை பதிவாகும்.

சென்னையில் மழை பெய்யுமா?
சென்னையில் 30ம் தேதி மழைக்கு வாய்ப்பு உள்ளது.

டெல்டாவிற்கு பின் எங்கே செல்லும்?
ஞாயிற்றுக்கிழமை வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு இந்த புயல் செல்லும். தெற்கு ஆந்திர பிரதேசம் அருகே புயல் வலிமையை இழக்கும்.

-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications