அந்த புள்ளிதான் முக்கியம்! விஸ்வரூபம் எடுக்கும் 90B.. எங்கே இருக்கிறது காற்றழுத்த தாழ்வு மையம்..

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னைக்கு அருகே வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் மெதுவாக நகர தொடங்கி உள்ளது. இந்த தாழ்வு மையம் சென்னையில் இருந்து எங்கே உள்ளது என்பது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலிமை அடைந்து கொண்டே இருக்கிறது. இதனால் டிசம்பர், 11 முதல் டிசம்பர்., 14 வரை 4 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த தாழ்வு மையம் புயலாக மாறாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

weather

ஒரு தாழ்வு மையம் புயலாக மாறுவதற்கு கடலில் வெப்பநிலை கூடுதலாக இருக்க வேண்டும். அதாவது 27 டிகிரி செல்ஸியஸை விட அதிகம் இருக்க வேண்டும். அதோடு தாழ்வு மையம் நிலப்பரப்பில் இருந்து தூரமாக இருக்க வேண்டும்.

ஆனால் இந்த சூழ்நிலைகள் தற்போது வங்கக்கடலில் உள்ள தாழ்வு மையத்திற்கு சாதகமாக இல்லை. இதனால் வங்கக்கடலில் உருவான தாழ்வு மையம் புயலாக மாறாமல் கடுமையான மழையை கொடுக்கும்.

எங்கே உள்ளது: சென்னைக்கு அருகே வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் மெதுவாக நகர தொடங்கி உள்ளது. இந்த தாழ்வு மையம் சென்னையில் இருந்து எங்கே உள்ளது என்பது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இவை சென்னையில் இருந்து 450 கிமீ தூரத்திற்கு அதிகமான தூரத்தில் உள்ளது. இது 90 B என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இது இலங்கையை நோக்கி கிழக்கு திசையில் நகர்ந்து வருகிறது. இதற்கான புகைப்படங்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் வானிலை முன்னறிவிப்பு;

இதனால் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில்
பொதுவாக மிதமான மழை பெய்யக்கூடும், அவ்வப்போது வடகடலோர இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 26-27 செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியசாகவும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதன் காரணமாகவே 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை பேரிடர்களை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

11.12.2024; கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் வககிய இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராமநாதபுரம், புதுக்கோட்டை தம்மார், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு வட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

12.12.2024: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

13.12.2024 மற்றும் 14. 12. 2004 தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

15.12.2024 மற்றும் 16.12.2024 தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+