தீபாவளி நாளில் தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை பெய்யும்.. நாலே வரியில் நறுக்கென விளக்கிய வெதர்மேன்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் மேற்கு மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதற்கிடையே தீபாவளி நாளில் தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை பெய்யும் என்பது குறித்த தகவல்களை வெதர்மேன் பிரதீப் ஜான் பகிர்ந்துள்ளார்.
இந்தாண்டு பருவமழை தொடங்கியது முதலே தமிழ்நாட்டில் நல்ல மழை பெய்து வருகிறது. மாநிலம் முழுக்கவே நல்ல மழை இருப்பதால் பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பிவிட்டன.

குறிப்பாகக் கடந்த சில நாட்களாகத் தென்தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், வடதமிழக உள் மாவட்டங்கள் மற்றும் கடலோர தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்தது.
தீபாவளி நாள்: மழை இப்படித் தொடர்ந்து பெய்யும் நிலையில், தீபாவளி நாளில் மழை இருக்குமா என்பதே இங்குப் பலரது கேள்வியாக இருக்கிறது. ஏனென்றால் நமது நாட்டில் மிகப் பெரியளவில் கொண்டாடப்படும் பண்டிகையாகத் தீபாவளி இருக்கிறது. சாதி, மொழிகளைக் கடந்து பல்வேறு தரப்பினரும் தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள். இந்தாண்டு வரும் வியாழக்கிழமை தீபாவளி கொண்டாடப்படுகிறது.
வெள்ளிக்கிழமையும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் லாங் வீக் எண்டாக வருகிறது. இதனால் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு இன்றே கிளம்பிவிட்டனர். அதேநேரம் மாநிலத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், தீபாவளியன்று மழை பெய்யுமா என்பதே இங்கு பலருக்கும் எழுந்துள்ள கேள்வியாக இருக்கிறது.
வெதர்மேன்: இதற்கான பதிலைத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அளித்துள்ளார். தீபாவளி நாளில் எங்கெல்லாம் மழை இருக்கும்.. எங்கெல்லாம் மழை இருக்காது என்பது குறித்த தகவல்களை அவர் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மாநிலத்தின் மேற்கு பகுதிகளில் மழையின் கடைசி நாட்கள். தீபாவளி நாளில் இருந்து இது கிழக்கு நோக்கி மாறும். டெல்டா மற்றும் தெற்கு மற்றும் உள் தமிழகத்தின் சில பகுதிகளில் தீபாவளி நாளில் மழை பெய்யும்.
கேடிசிசி(சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதிகளில்) தீபாவளி நாளில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் இங்கொன்றும் அங்கொன்றுமாக அதிகாலை மழை பெய்யக்கூடும். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் கேடிசிசி பகுதிக்கு இது ஒரு நல்ல தீபாவளியாக இருக்கும். அதே சமயம் டெல்டா, உள் மற்றும் தென் தமிழகத்தில் மிதமான மழை பெய்யும்" என்று பதிவிட்டுள்ளார்.
வானிலை மையம்: முன்னதாக வானிலை மையம் வெளியிட்டிருந்த தினசரி செய்திக்குறிப்பில், "தென்னிந்தியக் கிழக்கு கடலோர பகுதிகளை ஒட்டி ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் அக். 31ம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நவ.1ம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.. ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது" என்று வானிலை மையம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications