ஊட்டியை விட.. உயரம் குறைவான குன்னூரில்தான் குளிர் அதிகம்! எப்படி சாத்தியம்? வெதர்மேன் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

நீலகிரி: குளிர் காலங்களில் வழக்கமாக ஊட்டியில்தான் குளிர் அதிகமாக இருக்கும். ஆனால், இந்த முறை ஊட்டியை விட உயரம் குறைவான பகுதியனா குன்னூரில் குளிர் அதிகமாக பதிவாகியிருக்கிறது. இதனால் மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை, ஊட்டி 7,350 அடி உயரத்தில் இருக்கிறது. ஆனால் குன்னூர் 6,070அடி உயரம்தான். அதாவது இரண்டுக்கும் இடையில் 1,280 அடி உயரம் வித்தியாசம் இருக்கிறது. வழக்கமாக குளிர் காலங்களில் உயரமான இடத்தில்தான் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். ஆனால், இந்தமுறை ஊட்டியை விட குன்னூரில் குளிர் அதிகமாக பதிவாகியிருக்கிறது.

Coonoor Ooty Tamil Nadu

சூடனா ஊட்டி

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெதர்மேன் பதிவிட்டிருப்பதாவது, "தென்னிந்திய தீபகற்பத்தில் நிலவும் உயர் அழுத்த மண்டலத்தால், குளிர் காலநிலை இன்னும் சில நாட்களுக்குத் தொடரும் என கணிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 23, அன்று பதிவாகியுள்ள தட்பவெப்ப நிலவரப்படி, குன்னூர் தென்னிந்தியாவின் மிகக் குளிரான மலைவாசஸ்தலமாக ஊட்டி-யை முந்தியுள்ளது. கிறிஸ்துமஸ் தினத்தன்று சென்னையின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

எவ்வளவு வெப்பநிலை?

குறைந்தபட்ச வெப்பநிலை பதிவில், குன்னூர் (6.0°C) முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து, கர்நாடகாவின் ஹாசன் (7.9°C), வால்பாறை AWS (8.3°C), ஊட்டி (8.4°C), ஏற்காடு (9.0°C), ஆந்திராவின் அரக்கு (9.4°C), கொடைக்கானல் (9.8°C) மற்றும் கேரளாவின் வயநாடு (கபனிகிரி) (11.1°C) எனப் பிற மலைவாசஸ்தலங்களிலும் குளிர் பதிவானது.

கோவையில் குளிர்

உள் தமிழகத்தின் பல பகுதிகளிலும் வெப்பநிலை கணிசமாகக் குறைந்து காணப்பட்டது. டிசம்பர் 23 அன்று, ஈரோட்டின் தளவாடி (12.4°C), கிருஷ்ணகிரியின் தேன்கனிக்கோட்டை (13.3°C), பழனி (13.4°C), சூளகிரி (14.1°C), திண்டுக்கல் (14.1°C) மற்றும் கோயம்புத்தூரின் பொள்ளாச்சி (14.3°C) ஆகிய இடங்களில் 17°Cக்கும் குறைவான வெப்பநிலை பதிவாகியுள்ளது.

மேலும், தோண்டாமுத்தூர் (14.8°C), ரெட்டியார்சத்திரம் (14.8°C), கிருஷ்ணகிரி (15.0°C), ஒட்டன்சத்திரம் (15.1°C), நத்தம் (15.4°C), கோயம்புத்தூர் (15.7°C), குன்னத்தூர் (16.0°C), அரூர் (16.1°C) மற்றும் கிணத்துக்கடவு (16.3°C) ஆகிய இடங்களிலும் குறைந்த வெப்பநிலை பதிவாகியுள்ளது.

மற்ற மாவட்டங்களில் குளிர்

மதுரை விமான நிலையம் (16.7°C), திருச்சுழி (16.7°C), அருப்புக்கோட்டை (16.8°C) போன்ற இடங்களிலும், சாத்தூர், நாகர்கோவில், திருப்பூர், கரூர் மற்றும் திருத்தணி (அனைத்தும் 17.0°C) ஆகிய பகுதிகளிலும் இதேபோன்ற குளிர் காலநிலை நிலவியது.

கடலோர தமிழகப் பகுதிகளிலும் இரவு நேர வெப்பநிலை குறைந்தே காணப்பட்டது. இதில், எண்ணூர் (19.5°C), தூத்துக்குடி (19.6°C), புதுச்சேரி (20.1°C), சோழிங்கநல்லூர் (20.3°C), கடலூர் (20.4°C), ஆதிராம்பட்டினம் (20.4°C), கும்மிடிப்பூண்டி (20.5°C) மற்றும் கேளம்பாக்கம் (20.7°C) ஆகிய இடங்களில் குறைந்த வெப்பநிலை பதிவானது.

பெங்களூரில் குளிர்

தென்னிந்திய பெருநகரங்களிலும் குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. ஹைதராபாத் (12.7°C) மிகக் குறைந்த வெப்பநிலையைப் பதிவு செய்தது. பெங்களூரு விமான நிலையம் (14.4°C), பெங்களூரு (15.2°C), சென்னை விமான நிலையம் (20.2°C) மற்றும் சென்னை (21.0°C) ஆகிய நகரங்களிலும் குளிர் உணரப்பட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+