எல் நினோவால் இந்தியா முழுக்க வறட்சி.. ஆனால் தமிழகத்தில் மட்டும் மழை வெளுக்குதே ஏன்? முக்கிய விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எல் நினோ ஆண்டுகளில் எப்போதும் பருவமழை குறைந்து, வறட்சி ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. இந்தாண்டும் கூட தென்மேற்கு பருவமழை போதியளவில் பெய்யாமல் பல இந்திய மாநிலங்களில் பற்றாக்குறை நிலவுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் மழை கொட்டி வருகிறது. இதற்கான காரணம் மற்றும் பின்னணி குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.

எல் நினோ காரணமாக இந்தியாவின் தென்மேற்கு பருவமழை குறைந்திருந்தது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் வழக்கத்தை விட குறைவாகவே தென்மேற்கு பருவமழை பதிவாகி இருந்தது. இதனால் வடகிழக்கு பருவமழையும் அதேபோல குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு நேர்மாறாக மழை வெளுத்து வாங்கி வருகிறது.

El Nino monsoon rain

எல் நினோ

அதாவது எல் நினோ இந்தியா முழுக்க தென்மேற்கு பருவமழையை குறைத்து, வறட்சியை ஏற்படுத்திய நிலையில், தமிழகத்தை பொறுத்தவரை இதற்கு மாறான ஒரு நிலை ஏற்படுகிறது.. எல் நினோ ஆண்டுகளில் தென்மேற்கு பருவமழை குறைந்தாலும், வடகிழக்கு பருவமழையின்போது கனமழை மற்றும் வெள்ளம் ஏற்படுவதற்கான சாதகமான சூழல்கள் உருவாகிறது..

பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை வழக்கத்தைவிட அதிகரிப்பதே எல் நினோ நிகழ்வின் முக்கிய அம்சமாகும். இது உலகளாவிய காற்றோட்டம் மற்றும் காற்றழுத்த அமைப்புகளில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

என்ன நடக்கும்

பொதுவாக மேற்கு பசிபிக் கடல் பகுதியில் வெப்பமான காற்று மேலெழும்பி, குறைந்த காற்றழுத்தத்தை உருவாக்குகிறது. இதனால் இந்தியாவை நோக்கி ஈரப்பதம் நிறைந்த காற்று வருவதற்கு சாதகமான சூழல் உருவாகிறது. ஆனால், எல் நினோவின்போது இந்த காற்றோட்ட அமைப்பு மாறுகிறது. பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் காற்று மேலெழும் பகுதி நகர்வதால், இந்திய பகுதியில் காற்று கீழிறங்கும் தன்மை அதிகரிக்கலாம். இது மேக உருவாக்கத்தை குறைத்து, தென்மேற்கு பருவமழையைப் பலவீனப்படுத்துகிறது. இந்தாண்டும் கூட இதன் காரணமாகவே மழை குறைந்திருந்தது. இதனால் வறட்சி ஆபத்தும் அதிகரித்தது.

தமிழ்நாடு மழை

ஆனால், தமிழகத்தில் நிலைமை முழுமையாக வேறாக இருக்கிறது. தமிழகத்திற்கான மழைப்பொழிவு என்பது தென்மேற்கு பருவமழையைவிட வடகிழக்கு பருவமழையையே அதிகம் சார்ந்துள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான இந்த காலத்தில், காற்றின் திசை மாறி வங்கக்கடலில் இருந்து ஈரப்பதம் நிறைந்த காற்று தமிழக கடற்கரையை நோக்கி வீசுகிறது.

2015 பெருமழை

எல் நினோ உலகளாவிய காற்றழுத்த அமைப்புகளில் மாற்றங்களை ஏற்படுத்தும்போது, சில சூழல்களில் வங்கக்கடலில் இருந்து தமிழகத்தை நோக்கி வரும் ஈரப்பதத்தின் அளவு அதிகரிக்கலாம். இதனால் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள் உருவாகவும், அவை தீவிரமடையவும் சாதகமான சூழல் ஏற்படலாம். 2015ம் ஆண்டு இதற்கு ஒரு முக்கிய உதாரணமாக சொல்லலாம். அப்போது வலுவான எல் நினோ நிலவிய நிலையில், இந்தியாவின் பல பகுதிகளில் தென்மேற்கு பருவமழை குறைந்தது. ஆனால், அதே ஆண்டில் தமிழகத்தில் குறிப்பாக சென்னையில், டிசம்பர் மாதத்தில் மிக கனமழை பெய்து பெரும் வெள்ளம் ஏற்பட்டது அனைவருக்கும் நினைவில் இருக்கும்.

எல் நினோ மட்டுமின்றி, இந்திய பெருங்கடலின் வெப்பநிலை மாற்றங்களும் தமிழக மழைப்பொழிவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்திய பெருங்கடல் இருமுனை நிகழ்வு, வங்கக்கடலின் கடல் மேற்பரப்பு வெப்பநிலை, காற்றோட்டம் மற்றும் கடல் நீரோட்டங்கள் ஆகியவையும் வடகிழக்கு பருவமழையைத் தீர்மானிக்கின்றன.

என்ன நடக்கும்?

கடல் வெப்பநிலை அதிகமாக இருக்கும்போது ஆவியாதல் அதிகரித்து, வளிமண்டலத்துக்கு அதிக ஈரப்பதம் கிடைக்கலாம். இந்த ஈரப்பதம் காற்றழுத்தத் தாழ்வு பகுதிகளுடன் இணையும் போது கனமழைக்கு வழிவகுக்கலாம். இருப்பினும், மழையின் அளவு மற்றும் புயல்களின் தீவிரம் காற்றழுத்த அமைப்புகள் உள்ளிட்ட பல விஷயங்களை பொறுத்தே அமையும்.

சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் எல் நினோ தென்மேற்கு பருவமழையை பலவீனப்படுத்தும் அதேநேரம் தமிழகத்தின் வடகிழக்கு பருவமழையை அதிகரிக்கும் சூழலை ஏற்படுத்துகிறது. வங்கக்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலின் நிலைகளையும் பொறுத்து மழையின் தீவிரம் அதிகரிக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+